வாழைப்பூவில் சப்பாத்தி செஞ்சிருக்கீங்களா..? டின்னருக்கு டிரை பண்ணி பாருங்க..!

வாழைப்பூவில் சப்பாத்தி

வாழைப்பூவின் நன்மைகளை பெற வேண்டும் என நினைக்கிறீர்கள் எனில் கோதுமை மாவில் கலந்து சப்பாத்தியாக சுட்டு சாப்பிடலாம். இதனால் இரட்டிப்பு நன்மைகளை பெறலாம்.

  • Share this:
    வாழைப்பூவின் துவர்ப்பு சுவை தெரியாமல் இருக்க பெரும்பாலானோர் வடை சுட்டு சாப்பிடுவார்கள். அந்த வடையின் சுவையும் அட்டகாசமாக இருக்கும். சிலர் எண்ணெய் உணவுகளை தவிர்ப்பார்கள். இருப்பினும் வாழைப்பூவின் நன்மைகளை பெற வேண்டும் என நினைக்கிறீர்கள் எனில் கோதுமை மாவில் கலந்து சப்பாத்தியாக சுட்டு சாப்பிடலாம். இதனால் இரட்டிப்பு நன்மைகளை பெறலாம்.

    தேவையான பொருட்கள் :

    வாழைப்பூ - ஒரு கப்
    கோதுமை மாவு - கால் கிலோ,
    பாசிப்பருப்பு - 5 tsp
    சின்ன வெங்காயம் – 7
    பூண்டு - 2 பல்
    தயிர் - 2 டீஸ்பூன்
    பச்சைமிளகாய் – 1
    எண்ணெய் - தே.அ
    சீரகம் - 1/4 tsp
    உப்பு - தே.அ



    செய்முறை :

    வாழைப்பூவை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பின் பாசி பருப்பை வேக வைத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்ததாக வாழைப்பூவுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து பச்சை வாசனை போக கடாயில் வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின் வேக வைத்த பாசி பருப்புடன் வதக்கிய வாழைப்பூ கலவையையும் சேர்த்து மைய மாவு போல் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    தயிர் இருந்தால் போதும்..நொடியில் இட்லி , தோசைக்கு சைட் டிஷ் ரெடி..!

    பின் கோதுமை மாவு பிசையும்போது தயிர் மற்றும் அரைத்த இந்த பேஸ்ட் , போதுமான உப்பு சேர்த்து எப்போதும் போல் பிசைந்துகொள்ளுங்கள்.

    பின் உருட்டி சுட்டு எடுங்கள். இந்த மாவை பிசைந்ததும் சுட்டுவிடுங்கள். வாழைப்பூ நிறம் மாறும் என்பதால் மாவின் நிறமும் மாறிவிடும்.

     

     

     

     
    Published by:Sivaranjani E
    First published: