• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கறி குழம்பு சுவையில் வாழைக்காய் குழம்பு செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..? உங்களுக்கான ரெசிபி இதோ...

கறி குழம்பு சுவையில் வாழைக்காய் குழம்பு செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..? உங்களுக்கான ரெசிபி இதோ...

வாழைக்காய் குழம்பு

வாழைக்காய் குழம்பு

இந்த ரெசிபியை பாருங்க.. அடுத்த முறை நீங்களே சமைப்பீங்க...

  • Share this:
வாழைக்காயை வறுப்பதுதான் பலருடையாக முதல் தேர்வாக இருக்கும். ஆனால் என்றைக்காவது அதில் குழம்பு வைக்க யோசத்ததுண்டா..? அதுவும் கறிக்குழம்பு சுவையில் சமைத்து சாப்பிட தோன்றியதுண்டா..? இந்த ரெசிபியை பாருங்க.. அடுத்த முறை நீங்களே சமைப்பீங்க...

தேவையான பொருட்கள் :

வாழைக்காய் – 2
சின்ன வெங்காயம் – 8
வெங்காயம் - 2
தக்காளி - 2
எண்ணெய் – 5 ஸ்பூன்
பூண்டு – 7 பல்,
இஞ்சி சிறிய துண்டு – 2
தேங்காய் – கால் மூடி
கடுகு – அரை ஸ்பூன்
சோம்பு – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
சீரக தூள் – அரை ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
தனியா தூள் – ஒரு ஸ்பூன்
தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – ஒரு கொத்து



செய்முறை :

முதலில் சின்ன வெங்காயம் , பூண்டு, இஞ்சி , தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

வாழைக்காய்களை வட்டமாக நறுக்கி கடாயில் எண்ணெய் ஊற்று இரண்டு புறமும் சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் தக்காளியை தனியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

சாம்பார் வடை சாப்பிட்டு இருப்பீங்க... ரசம் வடை சாப்பிட்டு இருக்கீங்களா? இதோ ரெசிபி

பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

பச்சை வாசனை போனதும் தக்காளியை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். சுருங்கியதும் தூள் வகைகளை சேர்த்து வதக்குங்கள்.

அடுத்ததாக வாழைக்காய்களை சேர்த்து பிரட்டுங்கள். அடுத்ததாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க வையுங்கள்.

அதன் மேல் கறிவேப்பிலையும் தூவுங்கள். நன்கு கொதித்ததும் இறுதியாக கொத்தமல்லி தூவி அடுப்பை அனைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் வாழைக்காய் குழம்பு தயார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: