ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சப்பாத்திக்கு பேபி கார்ன் கிரேவி செஞ்சிருக்கீங்களா..? ஸ்டார் ஹோட்டலே தோற்றுப்போகும் ரெசிபி உங்களுக்காக..!

சப்பாத்திக்கு பேபி கார்ன் கிரேவி செஞ்சிருக்கீங்களா..? ஸ்டார் ஹோட்டலே தோற்றுப்போகும் ரெசிபி உங்களுக்காக..!

பேபி கார்ன் கிரேவி

பேபி கார்ன் கிரேவி

ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே சுவைக்கும் இந்த பேபி கார்ன் கிரேவியை ஒரு முறை வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பேபி கார்ன் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு. அதை இப்படி சப்பாத்திக்கு ஏற்ப கிரேவியாக செய்துகொடுங்கள். குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். அதுவும் ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே சுவைக்கும் இந்த பேபி கார்ன் கிரேவியை ஒரு முறை வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள். அதே சுவை கிடைக்க ரெசிபி உங்களுக்காக...

தேவையான பொருட்கள் :

வறுத்து அரைக்க :

பேபி கார்ன் - 50 கிராம்

எண்ணெய் - 2 tsp

பட்டை - 1

கிராம்பு - 1

ஏலக்காய் - 2

வரமிளகாய் - 4

பூண்டு - 4 பற்கள்

இஞ்சி - 1 துண்டு

தனியா - 2 tsp

மிளகு - 2 tsp

சீரகம் - 1 tsp

சோம்பு - 1/2 tsp

அரிசி - 1 tsp

கறிவேப்பிலை - 1 கொத்து

கிரேவி தாளிக்க :

எண்ணெய் - 2 tsp

கடுகு - 1 tsp

வெங்காயம் - 2 tsp

பச்சை மிளகாய் - 1

தக்காளி - 3

மஞ்சள் தூள் - 1/2 tsp

உப்பு - 1/4 tsp

கறிவேப்பிலை , கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

முதலில் பேபி கார்னை கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து உப்பு கொஞ்சம் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட நன்கு வெந்துவிடும்.

Also Read : செட்டிநாடு ஹோட்டல் ஸ்டைலில் பெப்பர் சிக்கன் செய்ய தெரியுமா..? ரெசிபி இதோ...

பின் வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து நல்ல விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , சேர்த்து பொறிக்க விடுங்கள்.

பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

பின் மஞ்சள் தூள் சேர்க்கவும். அனைத்தும் குழைய வதக்கியதும் அரைத்த விழுது சேர்த்து கலந்துவிட்டு தண்ணீர் தேவையான அளவு சேர்க்கவும்.

பின் பேபி கார்ன் சேர்த்து அதோடு உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டு 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிடுங்கள்.

இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் பேபி கார்ன் கிரேவி தயார்..!

First published:

Tags: Food recipes