நாளை ஆயுத பூஜை என்பதால் அனைவரும் படு பிசியாக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். நாம் சிறுசிறுக சேர்த்து வாங்கிய பொருட்கள், வாகனங்கள் , சொத்துக்களுக்கு பூஜை போட்டு கொண்டாடுவதுதான் ஆயுத பூஜையின் வழக்கம். அப்படி கடவுளுக்கு படையலாக பிரதானமாக இருப்பது சுண்டல் தான். அந்த சுண்டல் பதமாக சுவையாக வர வேண்டுமெனில் இந்த ரெசிபியை படியுங்கள்.
தேவையான பொருட்கள்
கொண்டைக் கடலை - ஒரு கப்
தேங்காய் - கால் கப்
எண்ணெய் - 1 ஸ்பூன்.
கருவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை :
கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
மறுநாள் கழுவி குக்கரில் போட்டு போதுமான நீர் மற்றும் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக விடவும்.
வெந்ததும் தண்ணீரை இறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொறிந்ததும், கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து வதக்கி அதை கொண்டைக் கடலையில் சேர்த்து பிரட்டினால் சுண்டல் தயார்.
இதேபோல்தா வெள்ளை சுண்டலுக்கும் செய்ய வேண்டும்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.