Home /News /lifestyle /

காலை உணவிற்கு எதுவுமே இல்லையா..? 5 நிமிடத்தில் அவல் உப்புமா செய்ய ரெசிபி இதோ..!

காலை உணவிற்கு எதுவுமே இல்லையா..? 5 நிமிடத்தில் அவல் உப்புமா செய்ய ரெசிபி இதோ..!

அவல் உப்புமா

அவல் உப்புமா

மிக விரைவாக மிக எளிதாக செய்யக் கூடிய ரெசிபி அவல் உப்புமா

    வீட்டில் காலை உணவுக்கு எதுவுமே இல்லாதபோது அவலில் உப்புமா செய்து சாப்பிட்டு பாருங்கள். வயிறு நிறைவாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    அவல் - 2 கப்
    எண்ணெய் - 1 Tsp
    பெருங்காயத்தூள் - 1/4 Tsp
    கடுகு - 1 Tsp
    சீரகம் - 1 Tsp
    உளுத்தம்பருப்பு - 1 Tsp
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    இஞ்சி - 1 இஞ்ச்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    வேர்க்கடலை - அரை கப்
    மஞ்சள் தூள் - 1/4 Tsp
    உப்பு - தே.அளவு
    எலுமிச்சை சாறு - 1 Tsp
    கொத்தமல்லி - சிறிதளவு

    நீங்கள் உணவை மென்று சாப்பிடுவீர்களா..? வேகமாக சாப்பிடுவீர்களா..? உங்களுக்குத்தான் இந்த செய்தி



    செய்முறை :

    அவலை சமைக்கும் முன் தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளுங்கள். கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

    அடுத்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். அதோடு இஞ்சி, பச்சை மிளகாயும் சேர்த்து வதக்குங்கள்.

    படிக்க: செட்டிநாடு கத்தரிக்காய் தொக்கு : கொஞ்சம் சாப்பிட்டாலும் சுவை நாவில் ஒட்டிக்கொள்ளும்

    வதக்கியதும் வேர்க்கடலை சேர்த்து வதக்குங்கள். பின் அவலை சேர்த்து பிரட்டுங்கள். அதன் மேல் எலுமிச்சை சாறு தூவி, கொத்தமல்லி தழைகளை சேர்த்து பிரட்டி 5 நிமிடம் வேக வைத்ததும் அடுப்பை அனைத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் அவல் உப்புமா தயார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube









    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    பார்க்க :

     

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி