Home /News /lifestyle /

காலையில் ஹெவியா சாப்பிட பிடிக்காதா..? இந்த ஒரு கிளாஸ் ’அவல் மில்க் ஷேக்’ குடித்து பாருங்கள்...

காலையில் ஹெவியா சாப்பிட பிடிக்காதா..? இந்த ஒரு கிளாஸ் ’அவல் மில்க் ஷேக்’ குடித்து பாருங்கள்...

அவல் மில்க் ஷேக்

அவல் மில்க் ஷேக்

அவலில் கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்துகளைப் பெற யார் வேண்டுமென்றாலும் இதை குடிக்கலாம். சரி... இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

டயட் மற்றும் சுகர் இருப்பவர்கள் அவல் சாப்பிடுவது நல்லது என்பார்கள். ஏனெனில் டயட் இருப்பவர்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காத அதே சமயம் குறைந்த கலோரி கொண்ட உணவாக அவல் இருக்கும். அதோடு அது ஆரோக்கியமானதும் கூட. அதேபோல் கார்போஹைட்ரேட் போன்ற குளுக்கோஸை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள விரும்பாத சர்க்கரை நோயாளிகளுக்கு அவல் பெஸ்ட் ஆப்ஷன். இவர்கள் மட்டும்தான் என்றில்லை... அவலில் கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்துகளைப் பெற யார் வேண்டுமென்றாலும் இதை குடிக்கலாம். சரி... இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிவப்பு அவல் - 1 கப்
சர்க்கரை - 31/2 tbsp
ஹார்லிக்ஸ் - 20 கிராம்
பால் - 1/2 லிட்டர்
வாழைப்பழம் - 2
மாம்பழம் - 1/4 கப்
வேர்க்கடலை - 1/2 tsp
முந்திரி - 1/2 tsp



செய்முறை :

அவலை ஒரு கடாயில் போட்டு மொறு மொறுவென வருமாறு வறுக்க வேண்டும்.

பின் வாழைப்பழத்தை ஒன்றும் பாதியுமாக மசித்துக்கொள்ளுங்கள். அதேபோல்தான் மாம்பழத்தையும் மசிக்க வேண்டும்.

இப்போது மிக்ஸி ஜாரில் பால் , சர்க்கரை, ஹார்லிக்ஸ் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது பரிமாறப்போகும் கிளாஸை எடுத்துக்கொள்ளுங்கள்.

எப்போதும் குடிக்கும் ரோஸ் மில்க்கை ஒரு முறை இப்படி வித்தியாசமாக செய்து பாருங்கள்....

அதில் மசித்து வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் மாம்பழத்தை 2 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் அதன் மேல் வறுத்து வைத்துள்ள அவலை 4 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இப்போது வறுத்த முந்திரி மற்றும் வேர்க்கடலையை கொஞ்சம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக அரைத்த பாலை ஊற்றுங்கள்.

இப்போது அதை அலங்கரிக்க கொஞ்சம் அவல் அதன் மேல் தூவுங்கள். பின் வேர்க்கடை மற்றும் முந்திரியையும் தூவுங்கள்.

அவ்வளவுதான் அவல் மில்க் ஷேக் தயார்.

 

 

 

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Food recipes

அடுத்த செய்தி