திடீர் விருந்தினரை அசத்த ஆப்பிள் ரவை கேக் ரெசிபி இதோ...

திடீர் விருந்தினரை அசத்த ஆப்பிள் ரவை கேக் ரெசிபி இதோ...
ஆப்பில் ரவை கேக்
  • News18
  • Last Updated: September 24, 2019, 10:29 PM IST
  • Share this:
மாலையில் ஏதாவது கொறிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டாலோ, திடீரென உறவினர்கள் வந்துவிட்டாலோ என்ன செய்வது என யோசிக்கும் உங்களுக்கு இந்த எளிமையான ஆப்பிள் ரவை கேக் கைக்கொடுக்கலாம். பஞ்சுபோல் லாவகமாக சாப்பிட ஆப்பிள் ரவை கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நறுக்கிய ஆப்பிள் - 1 1/2 கப்


சர்க்கரை - 1/2 கப்

பால் - 1 கப்

நெய் - 2 ஸ்பூன்ரவை - 3 கப்

ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்

தண்ணீர் - 2 கப்செய்முறை

ஆப்பிளை மிக்ஸியில் அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள்.

கடாயில் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள். அதில் ஆப்பிள் பேஸ்டையும் கலந்துகொள்ளுங்கள்.

அடுத்ததாக தண்ணீர் ஊற்றி கிளறிக்கொண்டே இருங்கள்.

கெட்டி பதத்திற்கு வரும்போது பால், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கலக்குங்கள். தண்ணீர் பதம் இறுகி கெட்டியாகும்வரை கிளறிக்கொண்டே இருங்கள்.

தண்ணீர் இறுகியதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அகலமான தட்டில் நெய் தடவி அதில் இந்த ரவை கலவையை ஊற்றுங்கள். நன்கு வெப்பம் நீங்க குளிர வையுங்கள். குளிர்ந்ததும் கத்தியைக் கொண்டு பிடித்த வடிவில் ஸ்லைஸ் போடுங்கள்.

சுவையான ஆப்பிள் ரவை கேக் தயார்.

பார்க்க : 

நெஞ்சு எரிச்சல் ஏன் வருகிறது ?


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

 
First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading