Home /News /lifestyle /

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆப்பிள் சிடர் வினிகரை வீட்டிலேயே செய்ய டிப்ஸ்!

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆப்பிள் சிடர் வினிகரை வீட்டிலேயே செய்ய டிப்ஸ்!

ஆப்பிள் சிடர் வினிகர் : ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக இதனை வைத்துள்ளனர். நம்மூர் சூப்பர் மார்க்கெட்டில்கூட நாம் இதைப் பார்த்திருப்போம். ஆனால், பலரும் இதை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விட்டிருப்போம். இதன் பயன்களை இப்போது அறிந்துகொள்வோம்.

ஆப்பிள் சிடர் வினிகர் : ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக இதனை வைத்துள்ளனர். நம்மூர் சூப்பர் மார்க்கெட்டில்கூட நாம் இதைப் பார்த்திருப்போம். ஆனால், பலரும் இதை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விட்டிருப்போம். இதன் பயன்களை இப்போது அறிந்துகொள்வோம்.

ஃப்ளோரின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், சோடியம் என ஐம்பதிற்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

  • News18
  • Last Updated :
    ஆப்பிள் பழச்சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஆப்பிள் சிடர் உடல் சார்ந்தும், அழகு சார்ந்தும் பல நன்மைகளைக் கொண்டிருக்கிறது. உடலின் பி.எச் அளவை சரியான அளவில் பராமரிக்கிறது.

    உடலில் உள்ள கிருமிகளை எதிர்க்கவும், தோல் மற்றும் தலை சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் இந்த வினிகர் சிறந்த மருந்தாகும்.  இரும்புச்சத்து, ஃப்ளோரின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், சோடியம் என ஐம்பதிற்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆப்பிள் சிடர் வினிகரில் விட்டமின் சத்து ஏ, பி1, பி2, பி6 மற்றும் இ ஆகியவை நிறைந்துள்ளன. இதனால் உடலின் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தி கார்போஹைட்ரேட்டைக் குறைக்கிறது.

    நீரிழிவு மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த வினிகரை இரண்டு நாளைக்கு ஒரு முறை ஒரு ஸ்பூன் அளவு குடித்தால், சர்க்கரை நோயின் அளவு கட்டுப்படுத்தப்படும். இதனை ஜப்பானில் 175 பேருக்கு ஆய்வு செய்து நிரூபித்துள்ளனர். உடல் எடை 3 மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு சுற்று குறைந்துள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறியுள்ளனர்.

    இந்த ஆப்பிள் சிடர் வினிகர் மிகவும் மலிவாகக் கிடைக்கிறது. இதில் ஆர்கானிக் முறையில் செய்யப்படும் வினிகரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வினிகர் பாட்டிலின் அடிப்பகுதியில் ஆப்பிளின் துகள்கள் படிந்திருக்கும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அது உண்மையான ஆர்கானிக் வினிகர்.



    ஆப்பிள் சிடர் வினிகரை வீட்டிலேயேயும் செய்யலாம். எவ்வாறு என்பதைக் காணலாம்.

    தேவையான பொருட்கள்

    ஆப்பிள் - 5
    சர்க்கரை - 2 tsp
    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை :

    ஆப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை கண்ணாடி பாட்டிலில் போட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆப்பிள் மூழ்கும் வரை நீர் ஊற்றுங்கள். தற்போது அதன் மேற்புறத்தை மெல்லிய துணியால் லூசாக கட்ட வேண்டும். அதை இருட்டு அறையில் குறைந்தது 1 மாதம் அப்படியே வைக்க வேண்டும். 1 மாதத்திற்குப் பிறகு திறந்து பார்க்கும் போது அதன் மேல் பாக்ட்டீரியா நுறைகள் இருக்கும். அவற்றை நீக்கியபின் வடிகட்டியால் வடித்துக்கொள்ளுங்கள். அந்த நீர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். அதை காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைத்து தேவைப்படும்போதெல்லாம் அருந்துங்கள்.
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Health tips

    அடுத்த செய்தி