Home /News /lifestyle /

காய்கறிகள் இல்லாதபோது என்ன சமைப்பது என யோசனையா..? அப்பளம் குழம்பு வெச்சு அசத்திடுங்க..!

காய்கறிகள் இல்லாதபோது என்ன சமைப்பது என யோசனையா..? அப்பளம் குழம்பு வெச்சு அசத்திடுங்க..!

அப்பளம் குழம்பு

அப்பளம் குழம்பு

Food |

    சேமிப்பும் , சிக்கனமும் வாழ்க்கையின் ஒழுக்கமான வாழ்க்கைக்கு அடிப்படை என பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். எனினும்,  கிடுகிடுவென ஏறும் காய்கறிகளை பார்த்தாலே பயம் உண்டாகிறதா..? காய்கறிகளே இல்லாமல் சூப்பரான சுவையில் இந்த அப்பளக் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    அப்பளம் - 4
    எண்ணெய் - 2 tbsp
    கடுகு - 1 tsp
    வெந்தையம் - 1/2 tsp
    பூண்டு - 5 பற்கள்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    சீரகம் - 1/2 tsp
    வெங்காயம் - 3
    தக்காளி - 2
    மிளகாய் தூள் - 2 tbsp
    மஞ்சள் - 1 tsp
    உப்பு - தே.அ
    புளி - ஒரு எலுமிச்சை அளவு



    செய்முறை :

    புளியை ஊற வைத்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அப்பளம் பொரித்து வைத்துக்கொள்ளுங்கள். கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு , வெந்தையம், சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

    அடுத்ததாக பூண்டு சேர்த்து வதக்குங்கள். பின் கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

    ரவை இருந்தால் வித்தியாசமான சுவையில் காலை டிஃபன் ரெடி..!

    வதங்கியதும் மஞ்சள், மிளகாய் தூள் சேர்த்து வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் புளித்தண்ணீர் ஊற்றுங்கள். 10 நிமிடம் கொதிக்க வையுங்கள்.

    தண்ணீர் வற்றியதும் அப்பளத்தை மூன்று துண்டாக உடைத்து போடுங்கள். பின் லாவகமாக பிரட்டுங்கள். அப்பளம் உடையக் கூடாது. அடுப்பை அணைத்துவிடுங்கள்.


    அவ்வளவுதான் சூப்பரானை சுவையில் அப்பளம் குழம்பு தயார்.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி