Home /News /lifestyle /

ஆந்திர ஸ்டைலில் தக்காளி பச்சடி செய்வது எப்படி?

ஆந்திர ஸ்டைலில் தக்காளி பச்சடி செய்வது எப்படி?

தக்காளி குழம்பு

தக்காளி குழம்பு

Tomato Pachadi | சுவையான தக்காளி பச்சடி செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

தக்காளியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதிலும் தக்காளி வறுவல், தக்காளி தொக்கு, தக்காளி பச்சடி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். தக்காளி பச்சடி ஆந்திரா ஸ்டைலில் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம். 

தேவையான பொருட்கள்

4 பெரிய தக்காளி

1 வெங்காயம்

siRiya சைஸ் புளி

8மிளகாய் வத்தல்

4பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி

1ஸ்பூன் வர மல்லி

1ஸ்பூன் சீரகம்

கறிவேப்பிலை

பெருங்காயம்

உப்பு

எண்ணெய்



செய்முறை

முதலில் ஒரு வாணலியில் மிளகாய் வத்தல், வரமல்லி, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து ஆற விடவும். அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கின வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி எடுத்து கொள்ள வேண்டும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி தக்காளி சேர்த்து, தேவையான உப்பு, புளி சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும்.

மேலும் படிக்க... சுவையான சீரகம் சாதம் செய்வது எப்படி?

ஒரு மிக்ஸியில் வறுத்து வெச்சிருக்கும் மிளகாய் போட்டு பொடி செய்து கூடவே தக்காளி சேர்த்து அரைத்து, கடைசியில் பூண்டு வெங்காயத்தை போட்டு ஒரு சுற்றும் சுத்தி எடுத்துக் கொள்ள                 வேண்டும்... இப்போது சுவையான கர சாரமான தக்காளி பச்சடி ரெடி.. இது சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை கூட தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும்..
Published by:Vaijayanthi S
First published:

Tags: Food, Tomato

அடுத்த செய்தி