முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இட்லி தோசைக்கு இனி இந்த சட்னியை செஞ்சு கொடுங்க..!

இட்லி தோசைக்கு இனி இந்த சட்னியை செஞ்சு கொடுங்க..!

ஆந்திரா ஸ்டைல் காய்ந்த மிளகாய் துவையல்

ஆந்திரா ஸ்டைல் காய்ந்த மிளகாய் துவையல்

ripe red chilli chutney : இட்லி தோசைக்கு ஏதாவது புதுசா ட்ரை பண்ணலாம் என ஆவலுடன் தேடுபவர்களுக்கு, இன்று நாங்க ஒரு சூப்பரான ரெசிபியை கூறப்போகிறோம். இது, உங்கள் குடும்பத்தினருக்கு ரொம்ப பிடிக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இட்லி, தோசை, வெள்ளை சாதம் என அனைத்து விதமான உணவுக்கு தோதாக இருக்கும் சுவை மிக்க துவையல் ஒன்றினை ‘காய்ந்த மிளகாய்’ கொண்டு தயார் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

காய்ந்த மிளகாய் - 6.

புளி - எலுமிச்சை பழம் அளவு.

வர மல்லி – 1 ஸ்பூன்.

சீரகம் – 1/2 ஸ்பூன்.

தக்காளி பழம் – 1.

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.

வேர்க்கடலை – 4 ஸ்பூன்.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

துவையல் செய்வதற்கு முன், துவையல் செய்ய எடுத்துக்கொண்ட தக்காளியை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

இதையடுத்து, ஒரு கோப்பையில் சிறிதளவு தண்ணீருடன் எலுமிச்சை பழ அளவிற்கு புளி சேர்த்து ஊற வைத்து, புளி கரைசல் தயார் செய்துக்கொள்ளவும்.

இப்போது, கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஏதும் சேர்க்காமல் 4 ஸ்பூன் வேர்கடலையினை சேர்த்து வறுத்து, பின்னர் ஆறவிட்டு தோல் நீக்கி சுத்தம் செய்துக்கொள்ளவும்.

Also Read | ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகாய் பொடி செய்ய ரெசிபி..!

தற்போது, அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் இதில் காய்ந்த மிளகாயினை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

பின்னர், இதனை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து இதே கடாயில் சிறிதளவு எண்ணெயுடன் வர மல்லி, சீரகம், நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

பின்னர், இந்த சேர்மத்தையும் மிளகாய் உள்ள மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து இந்த மிக்ஸி ஜாரிலேயே வறுத்து வைத்த வேர்கடலை சேர்த்து அரைக்கவும். சேர்மங்கள் நன்கு பொடியானதும் இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து துவையல் பதத்திற்கு அரைத்துக்கொள்ள மிளகாய் துவையல் ரெடி.

கார சாரமான இந்த துவையலை தோசை, இட்லி அல்லது சாம்பார் சாதத்துடன் ஒரு கிண்ணத்தில் வைத்து சுவையாக பரிமாறலாம். இருந்தால் சிறிது நெய் சேர்த்துக்கொள்ளவும்.

First published:

Tags: Food, Food recipes