Home /News /lifestyle /

ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன் - சூப்பராக செய்ய ரெசிபி இதோ...

ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன் - சூப்பராக செய்ய ரெசிபி இதோ...

ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன்

ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன்

Chicken Recipe |

    சிக்கனை எப்படி சமைத்தாலும் அது ருசியாக இருக்கும். அந்த வகையில் ஆந்திரா ஸ்டைலில் பெப்பர் சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 500 கிராம்
    வெங்காயம் - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
    பச்சை மிளகாய் - 3
    உப்பு - தே . அளவு
    எலுமிச்சை சாறு - 2 tsp
    கறிவேப்பிலை - சிறிதளவு
    தனியா பொடி - 2 tsp
    மஞ்சள் - 1/2 tsp
    எண்ணெய் - தே . அளவு
    மிளகு - 2 - 1/2
    கொத்தமல்லி - சிறிதளவு

    மஞ்சளில் இத்தனை மருத்துவ குணங்களா..? இத்தனை நாள் தெரியாமல் போச்சே..!



    செய்முறை :

    சிக்கனை சமைப்பதற்கு முன் அதை மசாலா தடவி ஊற வைக்க வேண்டும். அதற்கு மஞ்சள் பொடி , இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து நன்குக் கலந்து, ஃபிரிட்ஜில் 30 நிமிடங்கள் ஊற வையுங்கள்.

    அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். சூடானதும் பட்டை, ஏலக்காய் , கிராம்பு சேர்த்து தாளித்ததும் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

    அடுத்ததாக பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து பிரட்டுங்கள். 2 நிமிடங்களுக்கு அடி பிடிக்காமல் பிரட்டுங்கள்.

    கேழ்வரகு மாவில் புட்டு செஞ்சா எப்படி இருக்கும் தெரியுமா..? டிரை பண்ணி பாருங்க..!

    அடுத்ததாக தனியா பொடி, இடித்த மிளகுப் பொடி சேர்த்து சிறு தீயில் பிரட்டுங்கள். பின் 5 நிமிடங்களுக்கு மசாலா இணைவதற்கு ஏதுவாக பிரட்டிக்கொள்ளுங்கள்.

    இறுதியாக 1/4 கப் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள். பின் தண்ணீர் இறுகி சிக்கன் மென்மையாக வேகும் வரை கொதிக்க வையுங்கள்.

    தண்ணீர் வற்றி வறண்ட துண்டுகளானதும் கொத்தமல்லி தூவி இறக்கிவிடுங்கள். பரிமாறும்போது ஒரு ஸ்பூன் எலுமிச்சை தூவி பிரட்டிவிட்டுப் பரிமாறுங்கள்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube









    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    பார்க்க :

     

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி