நொடியில் செய்யலாம் ஹெல்தி சாண்ட்விச் : மாலையில் டீ டைமில் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்..!

சாண்ட்விச்

வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யலாம்.

 • Share this:
  சாட் உணவுகள் எங்கு பார்த்தாலும் கூட்டம் நிறைகிறது. காரணம் அதன் சுவைதான். ஆனால் அதை செய்வது அத்தனை கடினமல்ல. வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள்

  தக்காளி - 1
  வெங்காயம் - 1
  சாட் மசாலா - 1 tsp
  உப்பு - தே.அ
  கொத்தமல்லி - சிறிதளவு
  காட்டேஜ் சீஸ் - தே.அ
  எலுமிச்சை சாறு - 1 tsp
  மிளகாய் தூள் - 1/2 tsp
  வெண்ணெய் - 1 tsp  செய்முறை

  வெங்காயம் , தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

  பின் அவற்றை ஒரு பவுளில் சேர்த்து சாட் மசாலா , உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் துருவிய சீஸ் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

  வெண்டைக்காய் தேங்காய் புளித்தொக்கு எப்படி செய்வது..?

  பின் ஒரு பிரெட்டில் வெண்ணெய் தடவி அதில் இந்த கலவையை பரப்பி மர்றொரு பிரெட்டிலும் வெண்ணெய் தடவி அதன் மேல் மூடி அழுத்துவிடுங்கள்.

  பின் தோசைக்கல்லில் எண்ணெய் தடவி இந்த பிரெட்டை இரு புறமும் திருப்பி பொன்னிறமாக சுட்டு எடுங்கள். சிறு தீ வையுங்கள். இல்லையெனில் பிரெட் கருகி விடும்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: