வைட்டமின் C நிறைந்த பெரிய நெல்லிக்காய் ஜூஸ் : சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்

பின் அதை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து வடிகட்ட ஜூஸ் மட்டும் வெளியேறும். ஸ்பூன் வைத்து அழுத்த சாறு நன்றாக வெளியேறும்.

வைட்டமின் C நிறைந்த பெரிய நெல்லிக்காய் ஜூஸ் : சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்
நெல்லிக்காய் ஜூஸ்
  • Share this:
வைட்டமின் C -யானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதோடு இது இரத்தத்தை சுத்தீகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் பயமின்றி குடிக்கலாம். வீட்டிலேயே எப்படி போட்டுக் குடிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் - 1/4 கிலோ


மோர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
புதினா மற்றும் கறிவேப்பிலை பேஸ்ட் - 1/2 tsp

செய்முறை :

பெரிய நெல்லிக்காய்களை சிறு துண்டுகளாக கொட்டைகளை நீக்கி நறுக்கிக்கொள்ளுங்கள்.

பின் அதை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து வடிகட்ட ஜூஸ் மட்டும் வெளியேறும். ஸ்பூன் வைத்து அழுத்த சாறு நன்றாக வெளியேறும்.

தற்போது அந்த ஜூஸை மோருடன் கலந்துகொள்ளுங்கள். பின் புதினா, கறிவேப்பிலை பேஸ்டை கலந்து , உப்பு சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.

மொச்சைக் கொட்டையில் சாம்பார் செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..? இன்னைக்கே டிரை பண்ணுங்க..!

தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் போட்டு குடிக்கலாம்.

ஒரு கிளாஸ் மட்டும் குடியுங்கள். அளவுக்கு அதிகமாக குடித்தால் இதுவும் நஞ்சுதான்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading