டீ கடை சென்றாலே பலரும் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு போண்டாதான். போண்டா கடையில் வாங்குவதைக் காட்டிலும் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 6
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 tbsp
கடுகு - 1/2 tsp
உளுத்தம்பருப்பு - 1 tbsp
மஞ்சள் தூள் - 1/2 tsp
கருவேப்பிலை , கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2 tbsp
மாவு
கடலை மாவு - 250 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
உப்பு - 1tbsp
சோடா மாவு - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 tbsp
செய்முறை :
உருளைக்கிழங்கை மூன்று விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளுங்கள்.
கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளியுங்கள்.
பின் வேக வைத்த உருளைக்கிழங்கு மசித்து போடுங்கள். அதை உளுத்தம்பருப்போடு நன்கு பிரட்டி எடுங்கள்.
பின் மஞ்சள், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி எடுத்துக்கொள்ளுங்கள். அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
’சில்லி எக்ஸ்’... இதுவரை சாப்பிட்டதே இல்லையா..? இன்னைக்கே செஞ்சு பாருங்க..!
மாவு தயாரிக்க கிண்ணத்தில் மாவு கலக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்துகொள்ளுங்கள்.
பின் உருளைக்கிழங்கு மசாலாவை கையில் எண்ணெய் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.
பின் கடாய் வைத்து போண்டா சுட எண்ணெய் விட்டு காய விடுங்கள்.
காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் ஒவ்வொன்றாக போடுங்கள். சில நிமிடங்கள் அப்படியேவிட்டு பின் மறுபுறம் பிரட்டி எடுக்க சுற்றிலும் மாவு வேகும்.
பொன்னிறமாக மாவு வெந்ததும் எடுத்துவிடுங்கள். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு போண்டா தயார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.