மொறு மொறு அடை தோசை

இரவு டின்னருக்கு பொருத்தமான ரெசிபி

Web Desk | news18
Updated: February 28, 2019, 11:03 PM IST
மொறு மொறு அடை தோசை
இரவு டின்னருக்கு பொருத்தமான ரெசிபி
Web Desk | news18
Updated: February 28, 2019, 11:03 PM IST
இரவு டின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் இல்லத் தரசிகளுக்கு அடை தோசை நல்ல ரெசிபியாக இருக்கும். எளிதில் மொறு மொறுவென சுட்டு அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1/4 கப்
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
இட்லி அரிசி - 1/2 கப்
சிவப்பு மிளகாய் - 8
எண்ணெய்
கடுகு , சீரகம் - 1/2 tsp
பெருங்காயத் தூள் - 1/2 tsp
கருவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
தேங்காய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
வெங்காயம் - 2

செய்முறை :

  • துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, இட்லி அரிசி , சிவ்ப்பு மிளகாய் ஆகியவற்றை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

  • மறுநாள் கலை அதை மைய அரைக்காமல் , அரை பதத்திற்கு அரைக்க வேண்டும்.

  • தோசை சுடும்போது மட்டும் கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

  • பின் இஞ்சி, தேங்காய் (சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்) சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

  • அடுத்ததாக கருவேப்பிலையை சிறிதாக நறுக்கி மாவில் போடுங்கள். அதோடு தேவையான உப்பும் சேர்த்து நன்குக் கலக்கி வதக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.


மொறு மொறு அடை தோசைக்கான மாவு தயார்.

அடுப்பில் கல் தோசை சுடுவதுபோல்  சுட்டு எடுத்தால் அடை தோசை தயார். இதற்கு கார சட்னி, தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.
First published: February 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...