• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இப்படி கூட அடை தோசை மாவு அரைக்கலாமா..? மொறு மொறுனு வர இதுதான் காரணமா..?

இப்படி கூட அடை தோசை மாவு அரைக்கலாமா..? மொறு மொறுனு வர இதுதான் காரணமா..?

அடை தோசை மாவு

அடை தோசை மாவு

அரிசி மாவு தோசை சாப்பிட்டு அளுத்துப்போன வாய்க்கு அடை தோசை புது சுவையாக இருக்கும். எளிதில் மொறு மொறுவென தோசை வர இந்த குறிப்பை பின்பற்றுங்கள்.

  • Share this:
இரவு டின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் இல்லத் தரசிகளுக்கு அடை தோசை நல்ல ரெசிபியாக இருக்கும்.அதுவும் அரிசி மாவு தோசை சாப்பிட்டு அளுத்துப்போன வாய்க்கு அடை தோசை புது சுவையாக இருக்கும். எளிதில் மொறு மொறுவென தோசை வர இந்த குறிப்பை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள் : 

துவரம் பருப்பு - 1/4 கப்
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
இட்லி அரிசி - 1/2 கப்
சிவப்பு மிளகாய் - 8
எண்ணெய்
கடுகு , சீரகம் - 1/2 tsp
பெருங்காயத் தூள் - 1/2 tsp
கருவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
தேங்காய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
வெங்காயம் - 2



செய்முறை :

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, இட்லி அரிசி , சிவ்ப்பு மிளகாய் ஆகியவற்றை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் கலை அதை மைய அரைக்காமல் , அரை பதத்திற்கு அரைக்க வேண்டும்.

தோசை சுடும்போது மட்டும் கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் இஞ்சி, தேங்காய் (சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்) சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

ரெஸ்டாரண்டில் கிடைக்கும் அதே சுவையில் தந்தூரி மையோனைஸ் : எந்த ஸ்நாக்ஸுக்கும் தொட்டுக்கலாம்..!

அடுத்ததாக கருவேப்பிலையை சிறிதாக நறுக்கி மாவில் போடுங்கள். அதோடு தேவையான உப்பும் சேர்த்து நன்குக் கலக்கி வதக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி போடுங்கள். அதுவும் தனி சுவை தரும்.

மொறு மொறு அடை தோசைக்கான மாவு தயார். இதை தோசைக்கல்லில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி எடுத்து ஒரு சுற்று சுற்றுங்கள் போதும். மிகவும் மெல்லியதாக சுட்டால் கல்லில் ஒட்டிக்கொள்ளும். பின் சுற்றிலும் எண்ணெய் விட்டு மாவு சிவந்ததும் மறுபுறம் திருப்பிப் போடுங்கள். இரு புறமும் நன்கு வெந்ததும் மடித்து தட்டில் பரிமாறுங்கள்.

அவ்வளவுதான் மொறு மொறு அடை தோசை தயார். இதற்கு தேங்காய் சட்னி, காரச்சட்னி பொருத்தமாக இருக்கும். சிலர் காய்கறி அவியல் செய்தும் தொட்டுக்கொள்வார்கள்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: