மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக பிஸ்கட் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். அதிலும் சாக்லேட் ப்ளேவர் கொண்ட பிஸ்கட்டைப் பயன்படுத்தி மில்க் ஷேக் செய்து கொடுங்கள். இது குழந்தைகளுக்கு பிடித்தவாறும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும். சரி, இப்போது சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக் எப்படி செய்வதென்று பார்ப்போம்
தேவையான பொருட்கள்:
குளிர்ச்சியான பால் - 2 கப்
சாக்லேட் க்ரீம் பிஸ்கட் பாக்கெட் - 1-2
க்ரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட் - 1
சாக்லேட் சாஸ் - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸியில் பாலை ஊற்றி, அத்துடன் க்ரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் க்ரீம் உள்ள சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் சாக்லேட் சாஸ் சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால், சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக் ரெடி.
இந்த மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனை வேண்டாம் என்று கூறாமல் விரும்பி உண்ணுவார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.