ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மூன்று வகை பருப்பு பயன்படுத்தி இந்த சட்னி அரச்சு பாருங்க.. அப்புறம் அடிக்கடி செய்வீங்க..

மூன்று வகை பருப்பு பயன்படுத்தி இந்த சட்னி அரச்சு பாருங்க.. அப்புறம் அடிக்கடி செய்வீங்க..

பருப்பு சட்னி

பருப்பு சட்னி

இந்த மூன்று வகை பருப்பை பயன்படுத்தி செய்யப்படும் இந்த சட்னியும் உங்கள் காலை உணவை ஸ்பெஷலாக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

குழம்பு வகைகளை போன்றே சட்னி வகைகளும் இன்று அதிகமாகிவிட்டது. அதுவும் ஆரோக்கியமான காலை உணவை உறுதி செய்யும் வகையில் இந்த சட்னி வகைகளும் இருக்கின்றன. அந்த விதத்தில் இந்த மூன்று வகை பருப்பை பயன்படுத்தி செய்யப்படும் இந்த சட்னியும் உங்கள் காலை உணவை ஸ்பெஷலாக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 1 tbsp

கடலை பருப்பு - 1 tbsp

பாசிப்பருப்பு - 1 tbsp

காய்ந்த மிளகாய் - 4

தேங்காய் துருவல் - 2 tbsp

புளி - சிறிதளவு

பூண்டு - 2

உப்பு - தே.அ

எண்ணெய் - 2 tbsp

தாளிக்க :

எண்ணெய் - 1 tsp

கடுகு - 1/2 tsp

உளுந்து - 1/2 tsp

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

முதலில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி மூன்று பருப்புகளையும் பொன்னிறமாக வறுத்து ஆற வையுங்கள். மிளகாயையும் வறுத்துக்கொள்ள வேண்டும்.

ஆறியது ம் மிக்ஸியில் வறுத்த பருப்பு மற்றும் மிளகாயை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

ஆரோக்கியமாக இருக்க அசைவ உணவு அல்லது சைவ உணவு இரண்டில் எது பெஸ்ட்..?

பின் தேங்காய் துருவல் , புளி, உப்பு சேர்த்து மீண்டும் அரைத்துக்கொள்ளவும். பின் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

சட்னி அரைபட்டதும் ஒரு கிண்ணத்தில் வழித்து எடுத்துக்கொள்ளவும். பின் தாளிப்பு பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டவும்.

அவ்வளவுதான் பருப்பு சட்னி தயார்.

First published:

Tags: Breakfast, Chutney