சாயங்கால வேலை வந்துவிட்டாலே ஒரு கப் காபி அல்லது டீ உடன் மொறு, மொறுப்பான ஸ்நாக்ஸையும் சேர்த்துக்கொள்வது இந்தியர்களின் வழக்கம். குறிப்பாக பிரபலமான மாலை நேர நொறுத்தீனியான பக்கோடாவிற்கு மயங்காதவர்கள் கிடையாது. மேலும் பக்கோடா தயாரிக்க தேவையான பொருட்களும், செய்முறையும் மிகவும் எளிதானது. எண்ணெயில் டீப் ப்ரை செய்யப்பட்ட பக்கோடாவின் சிறப்பே அதன் மொறு, மொறு தன்மையும், சுண்டி இழுக்கும் மணமும் தான். பக்கோடாவில் எண்ணெயில் இருந்து எடுத்த சில விநாடிகளிலேயே மொறு மொறுப்பு குறைந்துவிடும், அதனை யாரும் சாப்பிட விரும்பமாட்டார்கள்.
எனவே பக்கோடாவை நீண்ட நேரத்திற்கு அதன் மொறு மொறுப்பு தன்மையுடன் நீடிக்க வைக்கக்கூடிய சில டிப்ஸ்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்...
பக்கோடாவை நீண்ட நேரம் மொறு, மொறுப்பாக வைத்திருக்க 5 டிப்ஸ்கள்:
1. அரிசி மாவு:
எந்த வகை பக்கோடாவாக இருந்தாலும் அது கடலை மாவைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது. அடுத்த முறை நீங்கள் பக்கோடா தயாரிக்க கடலை மாவு கலவையை தயாரிக்கும் போது அதில் சிறிதளவு அரிசி மாவை சேர்த்துப் பாருங்கள், பக்கோடா உட்புறத்தில் நல்ல சாப்ட்டாகவும், வெளிப்புறத்தில் மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
2. குளிர்ச்சியான தண்ணீர்:
பக்கோடாவிற்கு மாவு தயாரிக்கும் போது ஃபிரிட்ஜ் அல்லது பானையில் உள்ள குளிர்ச்சியான நீரைப் பயன்படுத்துங்கள். இதனால் மாவு குளிர்ச்சி அடைந்து, பக்கோடா அதிக எண்ணெய்யை உறிஞ்சுவதை தடுக்கிறது. அதே சமயம் மாவில் தண்ணீர் அதிகமாகாலும் பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் பக்கோடா சரியான வடிவத்திற்கு வராமல் போகலாம்.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வாழைப்பழம் : ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிட வேண்டும்..?
3. மாவை ஓவராக கிளற வேண்டாம்:
பக்கோடா மாவு தயாரிக்கும் போது மைதா பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதனை ஓவராக கலக்கவோ, கிளறவோ வேண்டாம். இது மாவை ஜவ்வு போல் மாற்றுகிறது. இதனால் பக்கோடா அதிக எண்ணெய்யை உறிஞ்சுவதோடு, சாப்பிட மிகவும் கடினமானதாகவும் மாறிவிடும்.
4. ஹெவி பாட்டம் தவாவிற்கு தடா:
பக்கோடா மொறு மொறுப்பாக வருவதற்கும், பாத்திரத்திற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் சமையல் கலைஞர்ளின் கருத்துபடி, சமைக்கும் பாத்திரங்களும் பக்கோடாவின் தன்மையை தீர்மானிப்பதாக கூறுகின்றனர். எனவே அடிகனமான கடாய் அல்லது வாணலியை பயன்படுத்தும் போது அவை சீரான வெப்பத்தை பராமரிக்காது என்பதால், அதன் கிரிஸ்பி தன்மை பாதிக்கப்படலாம்.
எடை இழப்பிற்கு உதவும் லெமன் டீ யில் இத்தனை நன்மைகள் இருக்கா? இதோ முழு விபரம்!
5. டிஸ்யூ பேப்பர் வேண்டாம்:
பக்கோடாவை எண்ணெயில் பொறித்து எடுத்ததும் தட்டில் டிஸ்யூ பேப்பர் அல்லது தினசரி பேப்பரை விரித்து, அதில் போட்டு வைப்பது தான் வழக்கம். இப்படி செய்வதால் பேப்பர் பக்கோடாவில் உள்ள எக்ஸ்ட்ரா ஆயிலை உறிஞ்சிவிடும் என்றாலும், இதனால் பக்கோட அதன் கிரிஸ்பி தன்மையை விரைவிலேயே இழக்கிறது. இதனை தவிர்க்க கேக் மற்றும் பிஸ்கெட்டுகளை ஆரவைக்க பயன்படுத்தும், கம்பி ரேக்குகளை பயன்படுத்தலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cooking tips, Onion pakora