கடையில் வாங்கும் மிளகாய் தூளின் தரத்தைக் கண்டறிய FSSAI வெளியிட்ட டிப்ஸ்...
கடையில் வாங்கும் மிளகாய் தூளின் தரத்தைக் கண்டறிய FSSAI வெளியிட்ட டிப்ஸ்...
மிளகாய் தூள்
90-கள் வரை மிளகாய் தூள் அரைக்க அதை வெயிலில் காய வைத்து அரைத்து பயன்படுத்துவார்கள். ஆனால் இன்றைய அவசர காலம் அதற்கெல்லாம் நேரம் இல்லை. நேரடியாக கடையில் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
இந்திய உணவு என்றாலே காரசாரம்தான் பிரதான சுவை. எந்த உணவாக இருந்தாலும் அதில் காரம் சேர்ப்பதுதான் நம் வழக்கம். கலாச்சாரம். அது இத்தாலி வகை உணவுகளான பாஸ்தா , பீட்ஸாவாக இருந்தாலும் மிளாய்களை தூளாக்கி தூவி சாப்பிடுவோம். சீனர்களின் ஃபிரைட் ரைசில் கூட மிளகாய் சேர்த்த செஷ்வான் ரைஸ் தான் விரும்புவார்கள். இப்படி இந்தியர்களின் நாவில் தங்கிப்போன மிளகாய் தூளின் பெருமையை அடுக்கிக்கொண்டே போகலாம்.
90கள் வரை மிளகாய் தூள் அரைக்க அதை வெயிலில் காய வைத்து அரைத்து பயன்படுத்துவார்கள். ஆனால் இன்றைய அவசர காலம் அதற்கெல்லாம் நேரம் இல்லை. நேரடியாக கடையில் வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதிலும் கெமிக்கல்கள் இல்லாத மிளகாய்த்தூள் தான் வாங்குகிறோமா என்றால் சந்தேகம்தான். எனவே அதன் தரத்தை, தூய்மையை கண்டறிய FSSAI ஒரு சோதனைச் செய்முறையை பகிர்ந்துள்ளது.
1) அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.
2) பின் அதில் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் கலக்குங்கள்.
3) பின் அந்த நீரை கைகளில் சிறிது எடுத்து தேய்த்து பாருங்கள். அதில் சொரசொரப்பான படிமங்கள் கிடைத்தால் அதில் செங்கல் தூள், மண் கலந்திருக்கலாம். வழவழப்பான தன்மையை உணர்ந்தால் சோப்பு கற்கள் சேர்த்திருக்கலாம்.
இந்த இரண்டு விஷயங்களையும் கண்டறிந்தால் அது தரமற்ற மிளகாய்த்தூள் என்று அர்த்தம். அடுத்த முறை வாங்கும்போது உஷாராக இருங்கள்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.