காய்கறிகள் ஃபிரெஷ்ஷாக இருக்க சாயம் பூசப்படுகிறதா..? கண்டறியும் முறை என்ன..? FSSAI விளக்கம்..!

வெண்டைக்காய்

ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளைக் கூட வியாபார் நோக்கம் கருதி கலப்படம் செய்வதும், சாயம் பூசுவதும் நம் உடலை பெருமளவு பாதிக்கிறது. இதை தடுக்கவே இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஒரு வீடியோவை ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.

  • Share this:
காய்கறிகள் ஃபிரெஷாக இருக்கிறதே..பச்சை பசேல் என மிளிர்கிறதே என ஆரோக்கியம் கருதி அதை பார்த்ததும் வாங்கிவிடுவோம். வாங்கிய பிறகும் நல்ல காய்கறிகளை வாங்கியுள்ளோம் என்ற மனத்திருப்தி கிடைக்கும். ஆனால் அவை உங்களுக்கே தெரியாத வண்ணம் கலப்படம் நிறைந்த பொருளாக இருந்தால் என்ன செய்வீர்கள்..? கண்களை பொய்யாகி சாயம் பூசி காய்கறிகளை விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை பல வகையான நோய் தாக்குதலையும் உண்டாக்கும் எனவும் கூறுகின்றனர்.

ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளைக் கூட வியாபார் நோக்கம் கருதி கலப்படம் செய்வதும், சாயம் பூசுவதும் நம் உடலை பெருமளவு பாதிக்கிறது. இதை தடுக்கவே இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஒரு வீடியோவை ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.

அதவது பச்சை காய்கறிகளில் மீன்களுக்கு பூஞ்சைத் தொற்று ஏற்படாமல் இருக்க பயன்படுத்தப்படும் malachite green என்னும் பச்சை சாயம் பூசப்படுகிறது என sciencedirect.com கூறுகிறது. அதோடு தொழிற்சாலைகளிலும், ஜவுளிகளில் சாயம் பூசவும் இது பயன்படுத்தப்படுவதாக அந்த இனையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி மீன் வளர்ப்பு முறையில் பூஞ்சைகளை கட்டுப்படுத்தவும், தொற்று ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள பயன்படுத்தப்படும் malachite green பூசுவது உடலுக்கு எண்ணற்ற பக்கவிளைவுகளை உண்டாக்குமாம்.National Center for Biotechnology Information (NCBI)கூற்றுப்படி உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும். அவற்றை நேரடியாகவும் தாக்கும் என குறிப்பிட்டுள்ளது. அதாவது இது புற்றுநோய், பிறழ்வு, குரோமோசோமால் எலும்பு முறிவு, டெரடோஜெனெசிட்டி மற்றும் சுவாச நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரி இத்தனை பாதிப்பை உண்டாக்கும் இந்த கலப்படத்தை எப்படி கண்டறிவது என FSSAI விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு பருத்தி பஞ்சு எடுத்துக்கொள்ளுங்கள். அதை காய்கறிகள் மேல் தேய்க்க அதில் பச்சை நிற சாயம் ஒட்டும் அவ்வாறு இருந்தால் அது கலப்படம் நிறைந்த காய்கறி. இப்படி வெண்டைக்காய் ,கீரை , பட்டாணி என பச்சைக்காய்கறிகள் அனைத்திலும் கண்டறியலாம்.பச்சை காய்கறிகள் மட்டுமல்லாது சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற மற்ற வகை காய்கறிகளிலும் கண்டறியலாம்.

பழங்கள் பளபளக்க பூசப்படும் மெழுகுப்பூச்சு என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்..? நன்மைகளும் உள்ளதா..?

பஞ்சு வைத்து கண்டுபிடிப்பது மட்டுமன்றி தண்ணீரில் உற வைத்து கழுவும்போதும் அதன் சாயம் நீங்கும் அதை வைத்தும் அதன் கலப்படத்தை கண்டறியலாம்.

நீங்கள் கடையில் வாங்கும்போதே கலப்படத்தைக் கண்டறிய பஞ்சு முறை உதவும். கடைக்கு போகும்போது கையோடு பஞ்சு எடுத்து செல்லுங்கள். காய்கறிகள் மீது தடவிப்பாருங்கள். உண்மை வெளிப்பட்டுவிடும்.

 

 
Published by:Sivaranjani E
First published: