நெத்திலி கருவாடு என்றாலே எந்த உணவுக்கும் பொருத்தமாக இருக்கும். அதன் மொறு மொறு சுவை எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தியாகாது. அந்த அளவிற்கு சுவை மிகுந்த நெத்திலி கருவாடை எப்படி பக்குவமாக மொறு மொறுவென வறுப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நெத்திலி கருவாடு - கையளவு
மிளகாய் தூள் - 1 tsp
மஞ்சள் தூள் - 1/2 tsp
உப்பு - தே.அ
எண்ணெய் - வறுக்க தே.அ
செய்முறை :
கருவாட்டின் தலையை நீக்கி சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
பின் சுடுதண்ணீர் வேக வைத்து அந்த தண்ணீரில் கருவாடை மூழ்க வைத்து ஊற வையுங்கள். 2 நிமிடங்கள் ஊற வேண்டும்.
மாலை நேரத்தில் சூடாக சாப்பிட வெண்ணெய் புட்டு : எளிமையான முறையில் உடனே செய்யலாம்
2 நிமிடங்கள் கழித்து அதில் இருக்கும் மண், தேவையற்ற உறுப்புகளை நீக்கிவிடுங்கள். தோலையும் விரலால் சுரண்டி நீக்கிக்கொள்ளுங்கள்.
பின் 2 முறை அலசுங்கள். இதனால் மண் இல்லாமல் சுத்தமாக இருக்கும். சுத்தம் செய்ததும் தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக பாத்திரத்தில் குழம்பு மிளகாய் தூள் , மஞ்சள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்தில் கலந்துகொள்ளுங்கள்.
பின் கருவாடை சேர்த்து உடையாமல் பக்குவமாக மசாலாவுடன் பிறட்டுங்கள். முற்றிலும் மசாலா கலந்திருக்க வேண்டும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காயந்ததும் கருவாடை போட்டு பிரட்டி எடுங்கள். பிரட்டும்போது உடையாமல் பிரட்டுங்கள்.
கருவாடு மொறு மொறுவென வர கருவாடு லேசாக வெடிப்பது போல் வரும். அதுவரை வறுத்துக்கொண்டே இருங்கள்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.