ஆட்டு மூளையில் பொரியல் செய்வது எப்படி?

ஆட்டு மூளையில் பொரியல் செய்வது எப்படி?

ஆட்டு மூளையில் பொரியல்

புரத சத்து நிறைந்த ஆட்டின் மூளையில் பொறியல் செய்வது பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

 • Share this:
  ஆட்டுக் கறி என்றாலே அனைவரும் அதில் உள்ள கறியை மட்டுமே சமைத்து உண்ணுவார்கள். ஆனால் மட்டனில் நிறைய வகயான ரெசிபிக்கள் செய்யலாம். இதில் கிராமங்களில் மக்கள் விரும்பி உண்ணுவது ஆட்டின் மூளையைதான். இது உண்பதற்கு முட்டை பொறியல் போல இருக்கும். ஆனால் உடலுக்கு நல்லது. புரத சத்து நிறைந்தது. இப்போது ஆட்டின் மூளையில் பொறியல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

  தேவையான பொருள்கள் :

  ஆட்டு மூளை - 2
  மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்
  மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
  வெங்காயம் - 1 பெரியது
  சோம்பு - 1/2 ஸ்பூன்
  மிளகு தூள் - அரை ஸ்பூன்
  எண்ணெய் - 3 ஸ்பூன்
  உப்பு - தேவையான அளவு
  கொத்தமல்லி தழை - சிறிதளவு

  செய்முறை :

  முதலில் ஆட்டு மூளையை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவைக்க வேண்டும். அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அது அடியில் பிடித்து விடும். மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்க வேண்டும்.

  பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். பின் வாணலியில் அடுப்பை  வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சோம்பு போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும். அது நன்றாக பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறி வேண்டும். 5 நிமிடம் கழித்து நன்றாக சிவந்தவுடன் மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கி பறிமாறலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: