ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஓட்ஸ் சாப்பிட்டால் வெயிட் போடுமா.? இத தெரிஞ்சுகிட்டு சரியா சாப்பிடுங்க.!

ஓட்ஸ் சாப்பிட்டால் வெயிட் போடுமா.? இத தெரிஞ்சுகிட்டு சரியா சாப்பிடுங்க.!

ஓட்ஸ்

ஓட்ஸ்

உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமே ஓட்ஸ் சாப்பிடலாம் என்பது தவறான கண்ணோட்டம். ஹொந்ஓட்ஸ் எப்படி சப்பிட வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உடல் எடையைக் குறைக்க விரும்பும் பெரும்பாலான மக்களுக்கு, காலையில் சிறந்த உணவுத் தேர்வாக ஓட்ஸ் இருக்கிறது. ஆனால், அறிவியல் என்ன கூறுகிறது என்றால் யாரெல்லாம் உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கான உணவு தான் ஓட்ஸ் எனத் தெரிவிக்கிறது. எனினும், ஓட்ஸ் உணவு ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளலாம் என்ற தவறான கருத்து நிலவுகிறது.

  பொதுவாக ஓட்ஸ் உணவில் கரையத்தக்க நார்ச்சத்து மிகுதியாக இருக்கிறது. இதனால், உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக் கொள்ளலாம். அதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை எளிமையாக்குகிறது. இது மட்டுமல்லாமல் ஓட்ஸ் உணவில் புரதம், விட்டமின் பி, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் இதர சத்துக்கள் நிரம்பியுள்ளன.

  ஓட்மீல்ஸ்வயிறு நிரம்பிய உணர்வை தரும் ரசாயனங்கள் உடலில் சுரக்க வேண்டும் என்றால், ஓட்மீல்ஸ் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஓட்மீல்ஸ் சாப்பிட்ட பிறகு பசி உணர்வு காணாமல் போய்விடும்.

  அதே சமயம், ஓட்ஸ் சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். பசியை கட்டுக்குள் கொண்டு வரும். சர்க்கரை நோயாளிகள் தினசரி சிறிதளவு ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். இது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கு எந்தெந்த வகையில் உதவுகிறது என்பதையும் பார்க்கலாம்.

  ஓட்ஸ் - ஆரோக்கிய பலன்கள்

  * வயிறு நலனுக்கு நல்லது

  * மலச்சிக்கலைத் தடுக்கிறது

  * ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்தது

  * கொலஸ்ட்ரால் அளவை சீராக்கும்

  * சிறுநீர் பாதை தொற்றுகளைத் தடுக்கும்

  * வைட்டமின்கள் நிறைந்தது

  * ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

  * பசியைக் கட்டுப்படுத்துகிறது

  * நோய் எதிர்ப்புச் சக்தி வலுப்படுகிறது

  உடல் எடை எப்படி அதிகரிக்கிறது?

  உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டுமே ஓட்ஸ் சாப்பிடலாம் என்பது தவறான கண்ணோட்டம் ஆகும். உடல் எடையைக் குறைக்க அல்லது அதிகரிக்க இரண்டுக்குமே இது உதவியாக இருக்கும். ஆனால், நீங்கள் எப்படி தயார் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் அதன் பலன் வேறுபடும்.

  உதாரணத்திற்கு, ஓட்ஸ் உணவுடன் சேர்த்து பழங்கள், தண்ணீர் போன்ற குறைவான கலோரி கொண்டவற்றை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும். ஆனால், சாக்கலேட், சிப்ஸ், வெண்ணெய் போன்ற கலோரி மிகுந்த உணவுகளுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்கும். ஓட்ஸ் உடன் சேர்த்து கிழங்கு வகைகள், அசைவ உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் கலோரி அதிகரிப்பதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கும்.

  Also Read : ஓட்ஸ் வெச்சு இப்படியெல்லாம் கூட சமைக்கலாமா? ஈசியான 3 ரெசிபிகள் உங்களுக்காக..!

   எவ்வளவு ஓட்ஸ் சாப்பிடலாம்?

  நாளொன்றுக்கு எவ்வளவு ஓட்ஸ் சாப்பிடலாம் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். சராசரி நபர் ஒருவர், நாளொன்றுக்கு 3 டேபிள் ஸ்பூன் அளவு ஓட்ஸ் சாப்பிடலாம். அதுவே நீங்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறீர்கள் என்றால் இதற்கு மேற்பட்ட அளவில் ஓட்ஸ் சாப்பிடலாம். ஆனால், ஓட்ஸ் உணவைக் காலையில் சாப்பிட வேண்டும் அல்லது இரவு கடைசி உணவாகச் சாப்பிட வேண்டும்.

  Published by:Josephine Aarthy
  First published:

  Tags: Oats, Weight gain, Weight loss