ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

டிராகன் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..? எப்போது சாப்பிட்டால் நல்லது..?

டிராகன் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா..? எப்போது சாப்பிட்டால் நல்லது..?

டிராகன் பழம்

டிராகன் பழம்

பார்வை தோற்றத்திற்கு மிக அழகாகவும், சுவையில் சூப்பராகவும் இருக்கக் கூடியது டிராகன் பழம் ஆகும். குணால் கபூர் என்ற சமையல் நிபுணர் அண்மையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், டிராகன் பழத்தினுடைய சிறப்புகளை விவரித்துள்ளார். அவரது பதிவில், “டிராகன் பழத்தின் அழகு மற்றும் சுவைக்காக பலர் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். அதே சமயம், இது நம் உடல் நலனுக்கும் சிறந்தது. இதை எப்படி சாப்பிடலாம், இதில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக பழக் கடைகளில் ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, திராட்சை, கொய்யா போன்ற வெகுவாக அறியப்பட்ட பழங்கள் விற்பனையாகும் அளவுக்கு டிராகன் பழம் விற்பனையாவதில்லை. ஒரு சில பழக்கடைகளில் மட்டுமே இந்த பழமும் கிடைக்கும். நம்மில் பலர் இதனை சாப்பிட்டிருக்கலாம் அல்லது இதுவரையிலும் சாப்பிடாதவர்களும் இருக்கலாம்.

டிராகன் பழமானது நல்ல பிங்க் நிறம் கொண்ட தோல் உடையதாகும். இதன் உள்ள புள்ளிகளைப் போன்ற கருப்பு விதையுடன், வெள்ளைநிற சதைப்பகுதி இருக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்பும் பலர் இதை தேடி, தேடி வாங்கி சாப்பிடுகின்றனர்.

பார்வை தோற்றத்திற்கு மிக அழகாகவும், சுவையில் சூப்பராகவும் இருக்கக் கூடியது டிராகன் பழம் ஆகும். குணால் கபூர் என்ற சமையல் நிபுணர் அண்மையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், டிராகன் பழத்தினுடைய சிறப்புகளை விவரித்துள்ளார். அவரது பதிவில், “டிராகன் பழத்தின் அழகு மற்றும் சுவைக்காக பலர் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். அதே சமயம், இது நம் உடல் நலனுக்கும் சிறந்தது. இதை எப்படி சாப்பிடலாம், இதில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டிராகன் பழத்தை எப்படி நறுக்குவது?

டிராகன் பழத்தை கட்டிங்போர்டு மீது வைத்துக் கொள்ளுங்கள். கூர்மையான கத்தி கொண்டு நீள வாக்கில் பாதியாக நறுக்கவும். வீடியோவில் குறிப்பிட்டுள்ளதைப் போல கைகளைப் பயன்படுத்தி பழத்தின் தோலை உரிக்கவும். சதைப்பகுதியை நீங்கள் நேரிடையாக அப்படியே சாப்பிடலாம் அல்லது நறுக்கி ஸ்பூன் மூலமாக சாப்பிடலாம்.
 
View this post on Instagram

A post shared by Kunal Kapur (@chefkunal)இதில் கிடைக்கும் பலன்கள் என்ன?

டிராகன் பழம் ஆண்டிஆக்ஸிடண்ட் சத்து நிறைந்தது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது புற்றுநோய் மற்றும் முன்கூட்டியே வயது முதிர்ந்த தோற்றம் ஏற்படுவது போன்ற பிரச்சினைகளை தடுக்கிறது. இதில் கொழுப்பு சத்து சுத்தமாகக் கிடையாது. நார்ச்சத்துகளால் நிரம்பியுள்ளது. வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால் பசி உணர்வு குறைகிறது.

ரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. குடல் நலனை மேம்படுத்துகின்ற ப்ரீபயோடிக்ஸ் நிறைந்ததாகும். குடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை கொண்டுள்ளது. விட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த இந்தப் பழம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

எப்போது சாப்பிடலாம்?

காலை நேரத்தில் டிராகன் பழம் சாப்பிடுவது சிறப்பு வாய்ந்ததாக அமையும். அதில் ஊட்டச்சத்துகளை உடல் உடனடியாக உறிஞ்சிக் கொள்ளும். எனினும், மதிய உணவு அல்லது இரவு உணவு வேளைக்கு முன்னதாகவும் சாப்பிடலாம். இரவில் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

Also Read : டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..?

எப்படி சாப்பிடலாம்?

டிராகன் பழத்தை நீங்கள் சாலட் போல சாப்பிடலாம். ஐஸ்க்ரீமில் சேர்த்து சாப்பிடலாம். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து ஜூஸ் போல அருந்தலாம். தயிர் சேர்த்து அரைத்து, ஸ்மூத்தியாகவும் சாப்பிடலாம். அதே சமயம், அதிகப்படியாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Dragon Fruit, Fruits