ஹோம் /நியூஸ் /lifestyle /

முள்ளங்கி இலையில் துவையல்... இதுவரை செஞ்சதில்லையா..? இன்னைக்கே டிரை பண்ணி பாத்திருங்க..!

முள்ளங்கி இலையில் துவையல்... இதுவரை செஞ்சதில்லையா..? இன்னைக்கே டிரை பண்ணி பாத்திருங்க..!

முள்ளங்கி இலையில் துவையல்

முள்ளங்கி இலையில் துவையல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

முள்ளங்கி இலையில் துவையல் பல வகையான நன்மைகளைக் கொண்ட உணவு. இதில் குறைந்த கலோரி கொண்டது. தோசை, இட்லி அதோடு சாதத்திற்கு பொருத்தமாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முள்ளங்கி இலை நறுக்கியது - 2 கப்

தக்காளி - 1

காய்ந்த மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 1

மஞ்சள் தூள் - 1 tsp

எண்ணெய் - 2 tbsp

கடுகு - 1 tsp

உளுத்தம் பருப்பு - 1 tbsp

வெந்தயம் - 1 tsp

பெருங்காயத்தூள் - 1 tsp

கருவேப்பிலை - 5

பூண்டு - 3

புளி - 1 துண்டு

செய்முறை :

முள்ளங்கி இலையை பொறியல் செய்வதுபோல் நறுக்கிக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

பின் காய்ந்த மிளகாய் , பச்சை மிளகாய் சேருங்கள். அடுத்ததாக தக்காளி சேர்த்து வதங்கியதும்.

பொடி போட்ட பச்சை கத்தரிக்காய் பொரியல் : மதிய உணவுக்கு அருமையாக இருக்கும்

பூண்டு, முள்ளங்கி இலை சேர்த்து வதக்குங்கள். புளியும் சேர்த்து வதக்குங்கள்.பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்து ஆற வையுங்கள்.

சூடு போனதும் மிக்ஸியில் போட்டு அதோடு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் மீண்டும் கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து அரைத்த பச்சடியில் சேருங்கள்.

அவ்வளவுதான் முள்ளங்கி இலை துவையல் தயார்.

First published:

Tags: Recipe