• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • முள்ளங்கி இலையில் துவையல் செய்து சாப்பிட்டிருக்கீங்களா..? இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க...

முள்ளங்கி இலையில் துவையல் செய்து சாப்பிட்டிருக்கீங்களா..? இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க...

முள்ளங்கி இலையில் துவையல்

முள்ளங்கி இலையில் துவையல்

இதில் குறைந்த கலோரி கொண்டது. தோசை, இட்லி அதோடு சாதத்திற்கு பொருத்தமாக இருக்கும்.

  • Share this:
முள்ளங்கி இலையில் துவையல் பல வகையான நன்மைகளைக் கொண்ட உணவு. இதில் குறைந்த கலோரி கொண்டது. தோசை, இட்லி அதோடு சாதத்திற்கு பொருத்தமாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முள்ளங்கி இலை நறுக்கியது - 2 கப்
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1 tsp
எண்ணெய் - 2 tbsp
கடுகு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1 tbsp
வெந்தயம் - 1 tsp
பெருங்காயத்தூள் - 1 tsp
கருவேப்பிலை - 5
பூண்டு - 3
புளி - 1 துண்டு



செய்முறை :

முள்ளங்கி இலையை பொறியல் செய்வதுபோல் நறுக்கிக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

பின் காய்ந்த மிளகாய் , பச்சை மிளகாய் சேருங்கள். அடுத்ததாக தக்காளி சேர்த்து வதங்கியதும்.

டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..?

பூண்டு, முள்ளங்கி இலை சேர்த்து வதக்குங்கள். புளியும் சேர்த்து வதக்குங்கள்.பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்து ஆற வையுங்கள்.

சூடு போனதும் மிக்ஸியில் போட்டு அதோடு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் மீண்டும் கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து அரைத்த பச்சடியில் சேருங்கள்.

அவ்வளவுதான் முள்ளங்கி இலை துவையல் தயார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: