தர்பூசணி சீசன் என்பதால் அனைவரும் வெயில் வெப்பத்தை தணிக்க தர்பூசணி சாப்பிடுவீர்கள். அதை சிலர் அப்படியே சாப்பிடலாம். ஜூஸ் போட்டு குடிக்கலாம். ஆனால் இப்படி அல்வா செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..? செஞ்சு சாப்பிட இதோ ரெசிபி.
தேவையான பொருட்கள் :
தர்பூசணி சதை - ஒரு கப்
நெய் - 2 - 3 tsp
ரவை - 1 tsp
கடலை மாவு - 1 tsp
ஏலக்காய் பொடி - 1/2 tsp
பால் - 1 கப்
பாதாம் , முந்திரி - தே. அளவு
செய்முறை :
தர்பூசணி சதைகளை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அவற்றை மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
கடாயில் நெய் ஊற்றி ரவை மற்றும் கடலை மாவு இரண்டையும் பொன்னிறமாகும் வரை பிறட்டவும்.
பின் அரைத்த தர்பூசணியை ஊற்றி கிளறுங்கள்.
அடுத்து சர்க்கரை காய்ச்சிய பால் ஆகிவற்றை ஊற்றி கிளறவும்.
தேவையான அளவு கெட்டிப்பதம் வந்ததும் அனைத்துவிடுங்கள்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.