விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு உகந்த பலகாரங்களை வைத்துப் படைப்பார்கள். அப்படி இனிப்பு வகைகளில் எள் உருண்டை, சர்க்கரை பொங்கல், பாசிபருப்பு பாயாசம், பாசிபருப்பு கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
எள் உருண்டை
தேவையான பொருட்கள்
எள் - ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்
செய்முறை :
எள்ளை, கடாயில் எண்ணெய் இல்லாமல் மிதமான தீயில் வறுத்துக்கொள்ளவும். வறுக்கும்போது வெடிக்கச் செய்யலாம். கவனமாக செய்யவும்.
பின் அதை ஆற வைக்கவும். ஆறியதும், எள்ளை மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக அரைக்க வேண்டும். அடுத்ததாக வெல்லத்தை துருவி வைத்து அதை அரைத்த எள்ளுடன் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் மைய அரைக்கவும்.
தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் காய்ச்சி ஊற்றி உருண்டை பிடிக்கலாம். அது தண்ணீராக உருண்டை பிடிக்கும் பதத்தில் இருந்தால் நல்லெண்ணெய் ஊற்றத் தேவையில்லை.
இப்படி ஒவ்வொரு உருண்டைகளாகப் பிடித்தால் எள் உருண்டை தயார்.
சர்க்கரைப் பொங்கல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
பாசி பருப்பு - கால் கப்
தண்ணீர் - 4 கப்
ஏலக்காய் - 2
முந்திரி, திராட்சை - கால் கப்
வெல்லம் - 1 கப்
செய்முறை :
பச்சரிசி மற்றும் பாசிபருப்பை சேர்த்துக் கழுவிவிடவும். குக்கரில் போட்டு நான்கு கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை காத்திருக்கவும்.
வெல்லத்தை உருக்க வேண்டும். பச்சரிசி வெந்ததும் உருக்கிய வெல்லத்தை அதில் ஊற்றிக் கிளறவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும்.பின் மிதமான சூட்டில் வைத்து கிளறிக் கொண்டே இருந்தால் வெல்லம் நன்குக் கலந்துவிடும்.
இறுதியாக மூன்று ஸ்பூன் நெய் விட்டு கால் கப் முந்திரி, திராட்சை சேர்த்து வதக்கி பொங்கலில் கொட்டி கலக்கவும்.
சர்க்கரை பொங்கல் தயார்.
பாசி பருப்பு பாயாசம்
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு - ஒரு கப்
பச்சரிசி - கால் கப்
வெல்லம் - அரை கப்
நெய் - 2 ஸ்பூன்
முந்திரி திராட்சை - கால் கப்
செய்முறை
பாசி பருப்பை கடாயில் வறுத்துக்கொள்ளவும். அதை குக்கரில் 4 விசில் வரு வரை வேக விடவும்.
பச்சரிசியை மைய கால் கப் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
வெல்லத்தை உருக்கிக்கொள்ளுங்கள்.
பருப்பு வெந்ததும் பச்சரிசி தண்ணீரை ஊற்றி கிளறவும். உருக்கிய வெல்லத்தையும் சேர்த்து கலக்கவும்.
கெட்டியான பதம் வரும் வரைக் கொதிக்க விடவும்.
இறுதியாக நெய் விட்டு முந்திரி சேர்த்து வதக்கி பாயாசத்தில் ஊற்றிக் கிளறவும்.
பாசி பருப்பு பாயாசம் தயார்.
பாசி பருப்பு கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - இரண்டு கப்
வெல்லம் - ஒரு கப்
தேங்காய் - ஒரு கப்
பாசி பருப்பு - அரை கப்
ஏலக்காய் பொடி - 2
செய்முறை :
பச்சரிசி மாவை சுடு தண்ணீர் ஊற்றி அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கிளறவும். மாவு தளதளவென இருக்குமாறு பிசைய வேண்டும். பிசைந்ததும் அரை மணி நேரம் ஊற வேண்டும்.
பாசிபருப்பை வேக வைத்துக்கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி உருக வைக்கவும். நன்கு உருகியதும் அதில் தேங்காய் சேர்க்கவும். வேக வைத்த வெல்லத்தை சேர்த்துக் கிளறவும். ஏலக்காய் பொடி சேர்த்துக்கொள்ளவும்.
பூரணம் நன்கு தண்ணீர் வற்றி கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
வெந்ததும் தட்டில் கொட்டி ஆர விடவும்.
தற்போது ஊற வைத்துள்ள பச்சரிசி மாவை உருண்டைகளாகப்பிடித்து அதில் இந்த பூரணத்தை ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து பிடித்து வைக்க வேண்டும். கொழுக்கட்டை அச்சு இருந்தாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்படி ஒவ்வொன்றாகப் பிடித்து இட்லி குக்கரில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
10 நிமிடங்கள் கழித்து இறக்கியதும் சுவையான பாசிபருப்பு பூரண கொழுக்கட்டை தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.