வாழ்வாங்கு வாழ வாழைப்பூ கட்லெட்

சர்க்கரை நோய், புற்றுநோய் அறிகுறிகள் என உடலுக்கு பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய நோயிலிருந்து விடுபட வாழைப்பூ பெரிதும் உதவியாக இருக்கிறது.

Web Desk | news18
Updated: February 6, 2019, 6:16 PM IST
வாழ்வாங்கு வாழ வாழைப்பூ கட்லெட்
வாழைப்பூ கட்லெட்
Web Desk | news18
Updated: February 6, 2019, 6:16 PM IST
வாழைப்பூ பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. சர்க்கரை நோய், புற்றுநோய் அறிகுறிகள் என உடலுக்கு பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய நோயிலிருந்து விடுபட வாழைப்பூ பெரிதும் உதவியாக இருக்கிறது. சிலருக்கு வாழைப்பூவை அப்படியே சமைத்துச் சாப்பிடப் பிடிக்காது. குறிப்பாக குழந்தைகள் முற்றிலும் தவிர்த்துவிடுவார்கள். எனவே அவர்களும் உண்ண வேண்டுமானால் இப்படி வாழைப்பூவில் கட்லெட் செய்து பாருங்கள். பின் மாலை நேர ஸ்னாக்ஸிற்கு வாழைப்பூ கட்லெட்தான் வேண்டும் என கேட்பார்கள்.

தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த வாழைப்பூ - 1.5 கப்
வேக வைத்த உருளைக் கிழங்கு - 2
வெங்காயம் - 1
சீரகம் உடைத்தது - 1/2 tsp
மிளகாய்த் தூள் - 1 அல்லது 1/2 tsp
கரம் மசாலா பொடி - 1/2
மைதா - 2 tsp
கொத்தமல்லி - தேவைக்கு ஏற்ப
உப்பு மற்றும் தண்ணீர் - தேவைக்கு ஏற்ப

வறுக்க தேவையான பொருட்கள்

சோள மாவு - 2 tsp
தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
பிரெட் க்ரம்ப்ஸ் - பிறட்டி எடுப்பதற்கு ஏற்ப
எண்ணெய் - வறுக்க தேவையான அளவுசெய்முறை

 • வாழைப்பூவை தண்ணீரில் போட்டு வேக வைக்க வேண்டும்.

 • வெந்ததும் அதை மிக்சியில் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
  வேக வைத்த உருளைக் கிழங்கை தோல் உறித்து அதை மசித்துக் கொள்ளவும்.

 • கடாயில் எண்ணெய் ஊற்றி உடைத்த சீரகம், சிறிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

 • அடுத்ததாக வாழைப்பூ பேஸ்டை அதில் போடவும். வாழைப்பூ நீர் இறுகும் வரை பிரட்டவும்.

 • பின் மசித்த உருளைக் கிழங்கை சேர்த்துக் கொள்ளவும். பிறகு மிளகாய் பொடி, உப்பு மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு பிரட்டவும். அதிக நீர் இருப்பது போல் தெரிந்தால் கொஞ்சம் மைதா கலந்து கொள்ளுங்கள். அதோடு கொத்தமல்லி தழைகளை சேர்த்துக் கொள்ளவும்.

 • கலவையை நன்கு கலந்ததும் அதை தனியாக பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

 • வாழைப்பூ கலவையில் சூடு குறைந்ததும், கட்லெட் போல் தட்டிக் கொள்ளவும்.

 • பின் சோள மாவை கெட்டிப் பதத்திற்கு தண்ணீரில் கலந்து கொண்டு கட்லெட்டை அதில் முக்கி எடுக்க வேண்டும்.

 • அடுத்ததாக பிரெட் க்ரம்ப்ஸில் பிரட்டி எடுத்து எண்ணெயில் பதமாக பொறித்து எடுக்கவும். பொன்னிறமாக வரும் வரை பொறிக்கவும். உடையாமல் பார்த்துக் கொள்ளவும்.

 • வாழைப்பூ கட்லெட் ரெடி. கட்லெட் தொட்டுக் கொள்ள டொமேட்டோ சாஸ் பக்கா பொருத்தமாக இருக்கும்.

First published: February 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...