இட்லி, தோசைக்கு மட்டுமல்ல சப்பாத்திக்கும் சுவையாக இருக்கும் வடகறி..! ருசியா எப்படி செய்வது?

இட்லி, தோசைக்கு மட்டுமல்ல சப்பாத்திக்கும் சுவையாக இருக்கும் வடகறி..! ருசியா எப்படி செய்வது?
வடகறி
  • News18
  • Last Updated: November 7, 2019, 10:21 PM IST
  • Share this:
காலையில் சூடான இட்லி, தோசை எதுவென்றாலும், அதற்கு தொட்டுக்கொள்ள வடகறி இருந்தால் எப்படி இருக்கும். அருமையான சுவையில் இன்றே செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள் :

கடலை பருப்பு - ஒரு கப்


பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 2

தக்காளி - 2எண்ணெய் - 2 ஸ்பூன்

பட்டை , லவங்கம், கிராம்பு - 1

சோம்பு - ஒரு ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

தனியா தூள் - 1/2 ஸ்பூன்

கரம் மசாலா - 1/2 ஸ்பூன்

மஞ்சள் - 1/4 ஸ்பூன்

தேங்யா - அரை கப்

முந்திரி - 2

உப்பு - தேவையான அளவுசெய்முறை :

கடலை பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறியதும் மிக்ஸியில் போட்டு அதோடு பச்சைமிளகாய் சேர்த்து மொறமொறப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இட்லி குக்கர் தட்டில் துணி பரப்பி அரைத்த கடலைமாவை கொட்டி 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

அதனிடையே கடாயில் எண்ணெய் விட்டு பட்டை , லவங்கம் என மசாலா பொருட்கள் சேர்த்து வதக்கவும். அடுத்து வெங்காயம் , பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் , தக்காளி சேர்த்து வதக்கவும்.

அடுத்ததாக மிளகாய் தூள், தனியா, கரமசாலா தூள் ,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதிக்கும் வரை மிக்ஸியில் துருவிய தேங்காய் , முந்திரி, சோம்பு சேர்த்து மைய அரைக்கவும்.

குழம்பு கொதித்ததும் வேக வைத்த கடலை பருப்பை சேர்த்துக் கிளறவும். தற்போது அரைத்த தேங்காயையும் சேர்க்கவும்.

பின் தண்ணீர் வற்றி உங்களுக்குத் தேவையான பதம் வந்ததும் குழம்பை இறக்கி கொத்தமல்லி தழை தூவவும்.

அவ்வளவுதான்...அசத்தலான வடகறி தயார்..!
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: November 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்