காரசாரமான சுவையில் வட கறி!

விரைவாகவும் சுவையாகவும் சமைத்து அசத்தலாம்.

news18
Updated: March 15, 2019, 5:13 PM IST
காரசாரமான சுவையில் வட கறி!
மாதிரிப் படம்
news18
Updated: March 15, 2019, 5:13 PM IST
தோசை, இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகளுக்குப் பொருத்தமாக இருக்கும் வடகறியை எளிதில் விரைவாகவும் சுவையாகவும் செய்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு - 1 கப்


சோம்பு - 1/2 tsp
சீரகம் - 1/2 tsp
பச்சை மிளகாய் - 1

Loading...

உப்பு - 1/2
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 tsp
பட்டை - 1 inch
இலை - 1
சோம்பு - 1/2 tsp
ஏலக்காய் -
கிராம்பு - 2
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
பச்சை மிளகாய் - 1
கருவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் - 1/4 tsp
காய்ந்த மிளகாய்ப் பொடி - 1/2 tsp
தனியா தூள் - 1/2 tsp
உப்பு - 1/2 tsp
தக்களி - 1
தண்ணீர் - ஒரு கப்
தேங்காய் பால் - 1 கப்செய்முறை :

கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் மிக்ஸியில் கடலைப் பருப்பைச் சேர்த்து, சீரகம், சோம்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கர கரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவை வடைபோல் தட்டிக் கொண்டு கடாயில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ளவும். தற்போது வடைகளை உடைத்துக்கொள்ளுங்கள். தனியாக வைத்துவிடுங்கள்.

கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். அடுத்ததாக வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். தற்போது இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள்.

அவை நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து நீர் இறுகும் வரை வதக்குங்கள். அடுத்ததாக மஞ்சள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பச்சை வாசனை போனதும் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள்.

கொதிநிலை வந்ததும் தேங்காய் பால் சேர்த்துக்கொள்ளுங்கள், அவை நன்கு வதங்கியதும் உடைத்து வைத்துள்ள வடைகளை அதில் போட்டு வதக்குங்கள். போதுமான அளவு கெட்டியானதும் கொத்தமல்லி தழைகளைத் தூவியதும். அடுப்பை அனைத்துவிடவும். சுவையான வடகறி ரெடி.
First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...