ஆரோக்கிய உணவிற்கு தட்டை பயறு குழம்பு

சர்க்கரை நோய், உடல் எடை அதிகரிப்பு பிரச்னை, தொற்று நோய் போன்றவற்றிற்கு தட்டைப் பயிறு நல்லது.

Web Desk | news18
Updated: March 1, 2019, 4:02 PM IST
ஆரோக்கிய உணவிற்கு தட்டை பயறு குழம்பு
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: March 1, 2019, 4:02 PM IST
15 நிமிடத்தில் ஆரோக்கியமான மதிய உணவு சமைக்க தட்டை பயறு குழம்பு ஏற்றது. சர்க்கரை நோய், உடல் எடை அதிகரிப்பு பிரச்னை, தொற்று நோய் போன்றவற்றிற்கு தட்டைப் பயறு நல்லது.

தேவையான பொருட்கள்:

தட்டை பயிறு - 1/2 கப்
எண்ணெய் - 2 tsp
வெந்தையம் - 1/2 tsp
சீரகம் - 1/2 tsp
உளுத்தம் பருப்பு - 1/2 tsp
வெங்காயம் - 1
பூண்டு - 10 பற்கள்
கருவேப்பிலை - சிறிதளவு
தக்காளி - 1
புளி - எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 1 tsp
மஞ்சள் பொடி - 1/4 tsp
உப்பு , தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
அரைக்க
தேங்காய் - 1/4 கப்
சோம்பு - 1 tspசெய்முறை :

காராமணியை கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய் மற்றும் சோம்புவை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளியுங்கள். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அதோடு பூண்டு பற்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தக்காளியை சேர்த்து நன்கு வதக்கியபின் கழுவி வைத்துள்ள காராமணியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5 நிமிடங்கள் நன்கு வதக்கிய பின் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வதக்குங்கள்.

அடுத்ததாக புளி கரைசலை ஊற்றுங்கள். கொதிநிலையை அடையும்போது அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்துக் கொள்ளவும்.

தற்போது குக்கரை மூடிவிடவும். 3 முதல் 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து, பிரெஷர் குறைந்ததும் குக்கரைத் திறந்து கொத்தமல்லி தழைகளைத் தூவுங்கள்.

 
First published: March 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...