காரசார தந்தூரி சிக்கன் செய்வது எப்படி ?


Updated: January 17, 2019, 7:52 PM IST
காரசார தந்தூரி சிக்கன் செய்வது எப்படி ?

Updated: January 17, 2019, 7:52 PM IST
ஸ்டாட்டர்ஸ் வகைகளில் அதிகம் விற்பனையாவதில் தந்தூரி சிக்கனும் ஒன்று. ரெஸ்டாரண்டுகளில் சுவையான தந்தூரி சிக்கன் கிடைத்தாலும் வீட்டிலேயே பக்குவமாக பதம் பார்த்து சமைத்து உண்பதில் இருக்கும் இன்பம் எத்தனை ரெஸ்டாரண்டுகளுக்குச் சென்றாலும் கிடைக்காது. எனவே, சுவையான தந்தூரி சிக்கனை உங்கள் வீட்டிலேயே எப்படி சமைப்பது என்பதைக் காணலாம். தேவையான பொருட்கள்

சிக்கன் – 500 கிராம்

தயிர் – ½ கப்

சிவப்பு மிளகாய் பேஸ்ட் – 1 மேசைக் கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக் கரண்டி
Loading...
எலுமிச்சை சாறு – 1 மேசைக் கரண்டி

சீரகம் – 1 மேசைக் கரண்டி

சிவப்பு மிளகாய் பொடி – 1 மேசைக் கரண்டி

கரம் மசாலா – 1 மேசைக் கரண்டி

வெண்ணெய் – 2 மேசைக் கரண்டி

எண்ணெய் – 1 மேசைக் கரண்டி

உப்பு – தேவையான அளவுசெய்முறை

  • சிக்கனை உங்கள் விருப்பம் போல் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  • பெரிய பாத்திரம் எடுத்துக் கொண்டு அதில் நறுக்கிய சிக்கன் துண்டுகளைப் போடவும்.

  • சிக்கனில் சிவப்பு மிளகாய் பேஸ்ட், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  • மற்றொரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, கரம் மசாலா பொடி, சீரகம் மற்றும் சிவப்பு மிளகாய் பொடி  ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும். பின் ஒரு மணி நேரம் ஊறவைத்த சிக்கனில் இந்தக் கலவையைச் சேர்க்கவும்.

  • ஃபோர்க் மேசைக் கரண்டி இருந்தால் சிக்கன் மேல் குத்தி  ஓட்டைகள் போடவும். இதனால் சிக்கனில் மசாலாக்கள் நன்கு இறங்கி சுவையளிக்கும். தற்போது இந்தச் சிக்கன் கலவையை மீண்டும் ஒரு மணி நேரம் ஃபிரிஜ்சில் வைக்கவும்.

  • உங்களிடம் தந்தூரி அடுப்பு அல்லது கிரில் அடுப்பு இருந்தால் அதில் சிக்கனைப் பொன்னிரமாக வாட்டி எடுக்கவும். இல்லையெனில்  சிக்கனை ஒரு கம்பியில் சொருகி நெருப்பு மூட்டி அதில் வாட்டி எடுக்கவும். பொன்னிறமாக வெந்ததும் அதில் வெண்ணெய்யை தடவி மீண்டும் 5 நிமிடங்கள் நெருப்பில் வாட்டி எடுங்கள். தற்போது சுவையான தந்தூரி சிக்கன் ரெடி.

First published: January 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...