சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பாயாசம்..! எப்படி செய்யனும் தெரியுமா?

பார்வையில் கூர்மை அதிகரிக்கும். இது நார்ச்சத்து நிறைந்துள்ளதால் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பாயாசம்..! எப்படி செய்யனும் தெரியுமா?
சர்க்கரை வள்ளிக் கிழங்கில் பாயாசம்
  • News18
  • Last Updated: August 13, 2019, 4:09 PM IST
  • Share this:
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் C மற்றும் A இரண்டும் சம அளவில் நிறைவாக இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். பார்வையில் கூர்மை அதிகரிக்கும். இது நார்ச்சத்து நிறைந்துள்ளதால் ஜீரன சக்தியையும் அதிகரிக்கும். பொட்டாசியம், சோடியம் இருப்பதால் இரத்த அழுத்தம் கொண்டோருக்கு நல்ல மருந்தாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1


ஜவ்வரிசி - 2 tsp

பால் - 3 கப்

ஏலக்காய் - 1 tspபாதாம் பருக்கு - 1 tsp

முந்திரி - 1 tsp

சர்க்கரை - 2 tspசெய்முறை 

ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கை குக்கரில் 3- விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். வெந்ததும் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

பாத்திரத்தில் பால் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பின் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைச் சேர்த்துக் கலக்கவும்.

பால் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டிப் பதத்திற்கு வரும் அப்போது சர்க்கரை மற்றும் முந்திரி , பாதாம் சேர்த்து கிளறி இரண்டு நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்கவிடவும்.

இறுதியாக நறுக்கி வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்துக் கிளறி கெட்டிப் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

பிஸ்தா இருந்தால் அல்லது முந்திரியை சிறிதாக நறுக்கி பாயாசத்திற்கு மேல் தூவி விடவும்.

சுவையான சர்க்கரை வள்ளி பாயாசம் தயார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading