தெகிட்ட தெகிட்ட சுவைக்கலாம் ரப்ரி மால்புவா

வட இந்திய உணவுப் பிரியர்களுக்காக...

Web Desk | news18
Updated: March 19, 2019, 10:43 PM IST
தெகிட்ட தெகிட்ட சுவைக்கலாம் ரப்ரி மால்புவா
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: March 19, 2019, 10:43 PM IST
இது வட இந்திய உணவாக இருந்தாலும் அதன் இனிப்புச் சுவை உச்சுக் கொட்ட வைத்துவிடும். இதை வீட்டிலும் முயற்சிக்கலாம்.

தேவையான பொருட்கள்

ரப்ரி செய்ய


பால் - 1.5 லிடர்
சர்க்கரை - 30 கிராம்
பாதாம் - 20 கிராம்

Loading...

பிஸ்தா - 20 கிராம்

சர்க்கரை பாகு செய்ய

தண்ணீர் - 200 மில்லி லிட்டர்
சர்க்கரை - 400 கிராம்
ஏலக்காய் - 4

மால்புவா செய்ய

சூடான பால் - 300 மில்லிலிட்டர்
பால் கோவா - 100 கிராம்
மைதா மாவு - 180 கிராம்
அரைத்த சர்க்கரை - 1 மேசைக்கரண்டி
சோம்பு பொடி - 1 மேசைக் கரண்டி
பேக்கிங் சோடா - 1/4 மேசைக்கரண்டி
நெய் - வறுக்க
பிஸ்தா - தேவையான அளவுசெய்முறை :

பாலை தண்ணீர் ஊற்றாமல் காய்ச்ச வேண்டும். கொதிநிலை வந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பால் கெட்டியான பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருங்கள். கெட்டிப் பதத்திற்கு வந்ததும் பாதாம் பிஸ்தாவை உடைத்து கலந்து கொள்ளுங்கள். அதன் சூடு தனிந்ததும் ஃப்ரிஜ்ஜில் வைத்துவிடுங்கள்.

மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை, உடைத்த ஏலக்காய் சேர்த்து பாகு பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.

அது கொதித்துக் கொண்டிருக்கும் வேலையில் ஒரு பாத்திரத்தில் சூடான பால், பால் கோவா சேர்த்துக் கலக்கவும். தற்போது மைதாமாவு சேர்த்து நன்குக் கலந்து கொள்ளவும். அதில் சர்க்கரை, சோம்புப் பொடி, பேக்கிங் சோடா சேர்த்து நன்குக் கலக்கினால் திரவ நிலை வரும்.

தற்போது கடாயில் நெய் ஊற்றி நன்குக் காய்ந்ததும் தோசை ஊற்றுவது போல் சிறிது சிறிதாக வட்டமான அளவில் ஊற்றுங்கள். அதை இருபுறமும் திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள். இப்படியாக ஐந்து மால்புவா செய்து கொள்ளுங்கள். அதன் சூடு தணிந்ததும் சர்க்கரைப் பாகுவில் 5 நிமிடம் ஊற வையுங்கள்.

ஊறியதும் தனியாக வெளியே எடுத்து ஒரு தட்டில் வைத்துவிடுங்கள். தற்போது ஃபிரிஜ்ஜில் வைத்துள்ள பால் திரட்டை அதன் மேன் அப்படியே ஊற்றுங்கள். அதன் மேல் உடைத்த பிஸ்தாக்களைத் தூவுங்கள். அவ்வளவே சுவையான ரப்ரி மால்புவா தயார்.
First published: March 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...