எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த பஞ்சாபி ராஜ்மா கிரேவி : எப்படி செய்வது..?

எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த பஞ்சாபி ராஜ்மா கிரேவி : எப்படி செய்வது..?

பஞ்சாபி ராஜ்மா கிரேவி

ஒரே இரவில் ராஜ்மாவை ஊறவைத்து பஞ்சாபி ராஜ்மா மசாலாவை நாம் எளிதாக செய்து விடலாம்.

  • Share this:
‘ராஜ்மா’ ரெட் கிட்னி பீன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் புரதம், கொழுப்பு, தாதுக்கள், நார்ச்சத்து, மாவுப் பொருள், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது.

தற்போது நாம் பஞ்சாபி ராஜ்மா செய்முறை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். ஒரே இரவில் ராஜ்மாவை ஊறவைத்து பஞ்சாபி ராஜ்மா மசாலாவை நாம் எளிதாக செய்து விடலாம்.

இது ஆரோக்கியமானது மட்டும் இல்லாமல் சுவையானதும் என்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்இதனை விரும்புவர். கிரேவி சுவையில் சமைக்கப்படும் ராஜ்மா பொதுவாக சாதத்துடன் பரிமாறப்படும். ஜீரா ரைஸ், ரைட்டா,நறுக்கிய வெங்காயம் மற்றும் ஊறுகாய்களுடன் பரிமாறும்போது இது மிகவும் சுவையாக இருக்கும்

ராஜ்மா கிரேவி - தேவையான பொருட்கள் :

ராஜ்மா - 1 கப்
தயிர் - 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
சீரக தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2
கொத்தமல்லி தூள் - 1/2 ஸ்பூன்செய்முறை :

முதலில் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்து கொள்ளவும். ராஜ்மாவை எடுத்து தண்ணீரில் முதல் நாள் இரவே சுமார் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர், ஒரு பிரஷர் குக்கரை எடுத்து அதில் ஊறிய ராஜ்மா, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். சுமார் 20 நிமிடங்கள் வரை சமைக்கவும்.

பஞ்சாபி ஸ்டைலில் மோர் குழம்பு செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? கோடை காலத்திற்கு மிகவும் நல்லது..!

பின்னர் அதிகப்படியான தண்ணீரை வடிகட்டி ராஜ்மாவை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். இப்போது, ​​ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் எண்ணெய்யை நடுத்தர தீயில் சூடாக்கவும்.

எண்ணெய் போதுமான சூடாக இருக்கும்போது, ​​அதில் வெங்காயம், சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அடுத்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சுமார் 2-3 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் இதனுடன் தயிர் சேர்த்து, மேலும் 2 நிமிடங்கள் சமைக்கவும்.

இப்போது தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அடிப்பிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறி கொண்டே இருக்கவும். பின்னர் கொத்தமல்லி தூள், சீரக தூள், மிளகாய் தூள் சேர்க்கவும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை சமைக்கவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர், ராஜ்மா சேர்த்து மூடி வைக்கவும். சிறிது நேரத்திற்கு பிறகு உப்பு சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் வேகவைக்கவும்.

இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கரம் மசாலா தூள்சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான ராஜ்மா கிரேவி ரெடி!.

 
Published by:Sivaranjani E
First published: