ஆலியா மானசாவிற்கு கணவர் சஞ்சீவ் செய்து கொடுத்த செட்டிநாடு இறால் தொக்கு : வேற லெவல் என பாராட்டிய ரெசிபி இதோ....

செட்டிநாடு இறால் தொக்கு

ஆலியாவிற்கு இறால் என்றாலே பிடிக்காது என்றும் சஞ்சீவ் சமைத்துக்கொடுத்த சுவையை சாப்பிட்ட பிறகு இறால் தொக்கும் தன்னுடைய ஃபேவரெட் லிஸ்டில் இருப்பதாக அந்த வீடியோவில் கூறியுள்ளார் சஞ்சீவ். அப்படி என்னதான் சுவை நீங்களும் வீட்டில் டிரை பண்ணி பாருங்க.

  • Share this:
    ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி என்றாலே ரொமாண்டிக் ஜோடி என்றுதான் பலரு சொல்வார்கள். அதற்கு ஏற்பதான் அவர்களுடைய யூடியூப் சேனலும் இருக்கும். சஞ்சீவ் ஆலியாவை கவனித்துக்கொள்வதும், சமைப்பது ஆலியா சஞ்சீவை கவனிப்பது என இவர்களுடைய யூடியூப் பக்கம் சென்றாலே காதல் மழைதான். அப்படி லாக்டவுனில் வீட்டில் இருக்கும் இந்த ஜோடிகள் சமையல் குறிப்புகளை பகிர்ந்து வருகின்றனர்.

    அந்தவகையில் சஞ்சீவ் ஆலியாவிற்கு மிகவும் பிடித்த இறால் தொக்கு செய்து கொடுக்கிறார். அதை இறால் கடையில் வாங்குவது முதல் சமைத்து ஆலியாவிற்கு பரிமாறுவது வரை முழு தொகுப்பாக பகிர்ந்துள்ளனர். அந்த இறால் ரெசிபி இதோ உங்களுக்காக...

    குறிப்பு : ஆலியாவிற்கு இறால் என்றாலே பிடிக்காது என்றும் சஞ்சீவ் சமைத்துக்கொடுத்த சுவையை சாப்பிட்ட பிறகு இறால் தொக்கும் தன்னுடைய ஃபேவரெட் லிஸ்டில் இருப்பதாக அந்த வீடியோவில் கூறியுள்ளார் சஞ்சீவ். அப்படி என்னதான் சுவை நீங்களும் வீட்டில் டிரை பண்ணி பாருங்க.

    தேவையான பொருட்கள் :

    இறால் - 1 கிலோ
    வெங்காயம்- 5
    மஞ்சள் தூள் - 1/2 tsp
    மிளகாய் தூள் - 1 tsp
    எண்ணெய் - 3 tbsp
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tsp
    உப்பு - தே.அ
    மிளகு தூள் - 1/2 tsp
    கொத்தமல்லி - கையளவு



    செய்முறை :

    வெங்காயம் பொடியாக நறுக்கொள்ளுங்கள்.

    பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

    அடுத்ததாக இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வர வேண்டும்.

    பின் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்குங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

    குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு கிரஞ்சி ஃபிங்கர் : 15 நிமிடத்தில் எளிமையாக செய்திடலாம்..!

    பின் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து பிரட்டுங்கள். இறுதியாக கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தட்டுப்போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.

    தண்ணீர் சுண்டி கெட்டி பதம் வரும்போது அடுப்பை அணைத்து பெப்பர் பொடி, கொத்தமல்லி தூவி இறக்கிவிடுங்கள்.

    அவ்வளவுதான் செட்டிநாடு இறால் தொக்கு தயார்.

    இதை ஆலியா சாப்பிட்டு பார்த்ததும் செம்ம டேஸ்ட் என ரசித்து சாப்பிட்டார்.

     
    Published by:Sivaranjani E
    First published: