முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இட்லிக்கு கறிக்குழம்பு சாப்பிடுவது மிகவும் பிடிக்குமா..? 15 நிமிடத்தில் செய்ய கமகம சிக்கன் மிளகு குழம்பு ரெசிபி...

இட்லிக்கு கறிக்குழம்பு சாப்பிடுவது மிகவும் பிடிக்குமா..? 15 நிமிடத்தில் செய்ய கமகம சிக்கன் மிளகு குழம்பு ரெசிபி...

இட்லிக்கு கறிக்குழம்பு

இட்லிக்கு கறிக்குழம்பு

இட்லிக்கு சிக்கன் குழம்பு சாப்பிட வேண்டும் என முடிவு செய்துவிட்டால் இந்த சிக்கன் குழம்பு ரெசிபியை டிரை பண்ணுங்கள். இதற்கு அதிக வேலை தேவைப்படாது 15 நிமிடங்களே போதுமானது. அதாவது சட்னி அரைக்கும் வேலையில் இதையும் செய்துவிடலாம்.

  • Last Updated :

சிக்கன் என்றாலே அனைவருக்கும் அலாதி இன்பம். அதன் சுவையும் மணமும் நம்மை கட்டிப்போட்டுவிடும். அதுவும் இட்லிக்கு சிக்கன் குழம்பு என்றால் வழக்கத்தைவிட இரண்டு இட்லி கூடுதலாக செல்லும். ஆனால் சில சமயங்களில் செய்வதற்கு சோம்பேரித்தனமாக இருந்தால் ஒரு சட்னியுடன் முடித்துக்கொள்வோம்.

இருந்தாலும் ஆசையை கைவிட முடியுமா..? அப்படி நீங்களும் சாப்பிட வேண்டும் என முடிவு செய்துவிட்டால் இந்த சிக்கன் குழம்பு ரெசிபியை டிரை பண்ணுங்கள். இதற்கு அதிக வேலை தேவைப்படாது 15 நிமிடங்களே போதுமானது. அதாவது சட்னி அரைக்கும் வேலையில் இதையும் செய்துவிடலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1/2 கிலோ

வெங்காயம் – 1

வெண்ணெய் – 100 கிராம்

இஞ்சி பூண்டு விழுது – 2 tsp

மிளகு – 2 tsp

மஞ்சள் தூள் – 1/4 tsp

மிளகுத்தூள் - 1/2 tsp

மிளகாய் தூள் – 1 tsp

தனியா தூள் – 1 tsp

உப்பு – தே. அளவு

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

முதலில் சிக்கனை நன்கு கழுவிக்கொள்ளுங்கள். பின் அதை ஒரு குக்கரில் போட்டு அதோடு கொடுத்துள்ள தூள் வகைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் அதில் மிளகும் சேர்த்துக்கொள்ளுங்கள். போதுமான் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிவிடுங்கள்.

5 நிமிடத்தில் டேஸ்டியான காலை உணவு தயார் செய்யணுமா ? அப்ப இத ட்ரை பண்ணுங்க..

பின் அதை அடுப்பில் வைத்து 3 விசில் வரை விட்டு இறக்குங்கள்.

அதற்கிடையில் கடாய் வைத்து வெண்ணெய் சேர்த்து வெங்காயம் போட்டு வதக்குங்கள். அதோடு இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நன்கு வதங்கியதும் வேக வைத்த சிக்கனை அப்படியே அதில் கொட்டி கொதிக்க வையுங்கள். 5 நிமிடங்கள் கொதித்ததும் அதில் இறக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கிவிடுங்கள்.

இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறுங்கள். கமகம சிக்கன் மிளகு குழம்பு தயார்.

First published:

Tags: Chicken recipe, Idli dosa batter