டேஸ்டியான பனீர் சன்னா மசாலா சமைப்பது எப்படி ?

சப்பாத்தி , பூரி, நாண் என ரொட்டி வகைகளுக்குப் பொருத்தமான சைட் டிஷ்

news18
Updated: March 11, 2019, 8:05 PM IST
டேஸ்டியான பனீர் சன்னா மசாலா சமைப்பது எப்படி ?
மாதிரிப் படம்
news18
Updated: March 11, 2019, 8:05 PM IST
சப்பாத்தி, பூரி, நாண் என ரொட்டி வகைகள் எதுவாயினும் அதற்கு இந்த பனீர் சன்னா மசாலா பொருத்தமான சைட் டிஷ்ஷாக இருக்கும். எவ்வாறு செய்வது எனப் பார்க்கலாம்.

செய்முறை :

வெள்ளை கொண்டைக் கடலை : 200 கிராம்
தண்ணீர் - 1 லிட்டர்
டீ பேக் - 1
பிரிஞ்சு இலை - 1
டீ பேக் - 1
கிராம்பு - 4
கருப்பு ஏலக்காய் - 1
பச்சை ஏலக்காய் - 1
பட்டை - 1 சிறிய துண்டு
உப்பு - 1 tsp
நெய் - 40 கிராம்
சீரகம் - 1 tsp
பூண்டு - 1 tsp
இஞ்சி - 1 tsp
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1 tsp
உப்பு - 1/2 tsp
மிளகாய் தூள் - 1 tsp
டிரை மேங்கோ பவுடர் - 1 tsp
மஞ்சள் - ஒரு சிட்டிகை
சீரகத் தூள் - 1 tsp
தனியா தூள் - 1 tsp
கரம் மசாலா - 1 tsp
பனீர் - 240 கிராம்செய்முறை :

இரவு முழுவதும் ஊற வைத்த கடலையை குக்கரில் போடுங்கள். அதற்கு தேவையான அளவு நீர் ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சு இலை, உப்பு மற்றும் டீ பேக் சேர்த்து மூடி விடுங்கள். 4 விசில் வந்ததும் இறக்கி விடுங்கள்.

கடாயில் நெய் ஊற்றி சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். பொறிந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்துக் கொள்ளுங்கள். வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

அடுத்ததாக தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள். அதோடு பச்சை மிளகாயையும் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

கலவை நன்கு வதங்கியதும் அனைத்து பொடிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அதோடு தேவைக்கு ஏற்ப உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பச்சை வாசனை போனதும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் சேர்த்து வதக்கவும். பனீரில் காரம் இறங்கியதும் வேக வைத்துள்ள கொண்டைக் கடலையை அதன் நீரோடு அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். தற்போது நன்குக் கலறி 10 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி விடுங்கள்.

டேஸ்டியான பனீர் சன்னா மசாலா தயார்.
First published: March 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...