இரும்புச் சத்து நிறைந்த பாலக் பனீர் சமைக்க ரெடியா ?

Web Desk | news18
Updated: February 27, 2019, 11:16 PM IST
இரும்புச் சத்து நிறைந்த பாலக் பனீர் சமைக்க ரெடியா ?
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: February 27, 2019, 11:16 PM IST
பசலைக் கீரையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இதனால் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்திகள் அதிகரிக்கும். அதேபோல் இதில் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளதால் எலும்பின் உறுதித் தன்மையை பாதுகாக்கிறது. அதனால் வாரம் ஒரு முறையாவது பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் உண்ணக் கூடியது.

தேவையான பொருட்கள்

பசலைக் கீரை - 500 கிராம்
பனீர் - 15
எண்ணெய் - 2 tsp
பிரிஞ்சி இலை - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tsp
வெங்காயம் - 2
சீரகம் - 1 tsp
தக்காளி - 1
உப்பு - 2 tsp
கரம் மசாலா - 1/2 tsp
மிளகாய்த் தூள் - 1/2 tsp
தனியா பொடி - 1/2 tsp
ஏலக்காய் 2
மில்க் க்ரீம் - 1 tspசெய்முறை :

 • கீரையை நன்கு சுத்தம் செய்த பின் குக்கரில் வேக வைத்து மிக்ஸியில் நன்கு மசித்துத் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  கடாயில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி பனீரை சிவக்க வறுத்துக் கொள்ளவும். அதையும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.

 • வெங்காயத்தை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். பின் தக்காளியையும் அரைத்துக் கொள்ளவும்.

 • மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் பட்டை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

 • வதங்கியதும் அரைத்து வைத்துள்ள வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

 • பச்சை வாசனை நீங்கியதும் , கரம் மசாலா, தனியா பொடி, மிளகாய் பொடி கலந்து மீண்டும் வதக்கவும். நன்கு வதங்கியதும், அரைத்து வைத்துள்ள தக்காளிக் கூழை ஊற்றவும்.

 • அடுப்பை சிறு தீயில் வைத்து எண்ணெய் தனியே பிரிந்து வரும் வரை வதக்கவும்.

 • பின் அரைத்து வைத்துள்ள பசலைக் கீரையை அதில் ஊற்றி சிறு தீயில் 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.

 • அடுத்ததாக வறுத்து வைத்துள்ள பனீர் துண்டுகளை அதில் சேர்த்து கலந்து கொள்ளவும். அவை சேர்ந்து கிரேவி பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.

 • இறுதியாக மில்க் க்ரீமை ஊற்றவும்.

 • சுவையான பாலக் பனீர் தயார். இதை சப்பாத்தி, வெள்ளை சோறு போன்றவற்றிற்கு உண்ணலாம்.


 
First published: February 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...