ஓட்ஸ் மசாலா அடை....காலை, இரவு என எந்த வேளையும் சாப்பிடலாம்..ஹெல்தியானது மட்டுமல்ல உடல் எடையும் குறையும்

ஓட்ஸை 15 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளுங்கள். அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக்கொள்ளுங்கள்.

ஓட்ஸ் மசாலா அடை....காலை, இரவு என எந்த வேளையும் சாப்பிடலாம்..ஹெல்தியானது மட்டுமல்ல உடல் எடையும் குறையும்
ஓட்ஸ் மசலா அடை
  • Share this:
ஓட்ஸ் கொண்டு பல வகையான ஹெல்தி உணவுகளை சமைக்கலாம். அந்த வகையில் இந்த அடை உங்களுக்கு பிடித்த உணவாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1 கப்


வெள்ளரிக்காய் - 1/4 பாதி
குடை மிளகாய் - 2 tsp
பச்சை மிளகாய் - 1கொத்தமல்லி - சிறிதளவு
காஷ்மீர் மிளகாய் தூள் - 1/2 tsp

அரைக்க :

சின்ன வெங்காயம் - 7
சீரகம் - 1/4 tsp
இஞ்சி - 1/2 துண்டு
தக்காளி - 1/2 பாதி
கேரட் - 1
ஓமம் - 1/4 tsp
கருவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் பொடி - 1/2 tsp
மிளகுப் பொடி - 1/2 tsp
உப்பு - தே.அசெய்முறை :

ஓட்ஸை 15 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளுங்கள். அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக்கொள்ளுங்கள்.

ஓட்ஸ் ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு அரைத்த விழுதை சேர்த்துக்கொள்ளுங்கள்.

காலை உணவுக்கு ஹெல்தியான ஓட்ஸ் ஆம்லெட் - உடல் எடை குறைப்பவர்களும் சாப்பிடலாம்..!

பின் குடை மிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிப்போடுங்கள். மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தற்போது அனைத்தையும் சேர்ந்து பிசைந்துகொள்ளுங்கள்.

அடுத்ததாக அதை அடை போல் தட்டி எடுத்து தோசைக்கல்லின் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுங்கள். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

அவ்வளவுதான் ஓட்ஸ் மசாலா அடை தயார்.
First published: October 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading