மொறு மொறு நெத்திலி மீன் வறுவல்!

இந்த சுவையில் சமைத்தால் நாவை விட்டு நீங்காது.

news18
Updated: April 17, 2019, 5:24 PM IST
மொறு மொறு நெத்திலி மீன் வறுவல்!
நெத்திலி மீன் வறுவல்
news18
Updated: April 17, 2019, 5:24 PM IST
நெத்திலி மீன் பொடிசாக இருந்தாலும் அதன் சுவை திமிங்கலம் போன்றது. இதில் குழம்பு செய்வதைக் காட்டிலும் இப்படி வறுத்துப் பாருங்கள். இந்த சுவை உங்கள் நாவை விட்டு நீங்காது.

தேவையான பொருட்கள்:

நெத்திலி - 500 கிராம்


தேங்காய் எண்ணெய் - வறுக்கத் தேவையான அளவு
ஊற வைக்கத் தேவையான பொருட்கள்:
எலுமிச்சை சாறு - 1 tsp

Loading...

சிவப்பு மிளகாய் பொடி - 1 tsp
மஞ்சள் பொடி - 1/2 tsp
தனியா பொடி - 1 1/2 tsp
மிளகுப் பொடி - 1/2 tsp
வெந்தையப் பொடி - ஒரு சிட்டிகை
இஞ்சி இடித்தது - அரை துண்டு
பூண்டு இடித்தது - 4 பற்கள்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவுசெய்முறை:

மீனை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

மேலே ஊற வைக்கக் குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒன்றாகக் கலந்து பேஸ்ட் பதத்திற்குக் கலந்துகொள்ளவும்.
கலந்ததும் அதில் சுந்தம் செய்து வைத்துள்ள மீனை அதில் பிரட்டிக்கொள்ளவும். அதை சிறிது நேரம் ஊற வைக்கவும்.

கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு அது சூடானதும், ஊற வைத்துள்ள மீன் துண்டுகளைப் போடவும்.

மீன் பொன்னிறமாக வறும் வரை வறுக்கவும். அப்போதுதான் மொறு மொறுவென இருக்கும். அவ்வளவுதான் சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார்.

Also Watch : ருசியோ ருசி… நாட்டுக் கோழி கிரேவி

First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...