ஈடு இணையற்ற சுவையில் நெத்திலி மீன் குழம்பு

கைகளை மழித்து சப்புக் கொட்டிக் கொண்டே சாப்பிடலாம்.

Sivaranjani E | news18
Updated: March 23, 2019, 8:02 PM IST
ஈடு இணையற்ற சுவையில் நெத்திலி மீன் குழம்பு
நெத்திலி மீன் குழம்பு
Sivaranjani E | news18
Updated: March 23, 2019, 8:02 PM IST
நெத்திலி மீன் குழம்பிற்கு ஈடு இணை வேறெந்த உணவிலும் பெற முடியாது. அதன் சுவையை நீங்களும் சுவைக்க இதோ ரெசிபி.

தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் - 5


தேங்காய் துருவல் - 1/2 கப்
சீரகம் - 1/2 Tsp
எண்ணெய் - 2 Tsp

Loading...

கடுகு - 1 Tsp
வெந்தையம் - 1/4 Tsp
சின்ன வெங்காயம் - 20
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 Tsp
தக்காளி - 1
மஞ்டள் - 1/2 Tsp
மிளகாய் தூள் - 1 Tsp
தனியா தூள் - 1 Tsp
உப்பு - தேவையான அளவு
கெட்டியான புளிக் கரைசல் - 1/2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவுசெய்முறை :

தேங்காய் துருவல் மற்றும் சீரகம் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

மீன் குழம்பிற்கு மண் பானைதான் சுவையைக் கூட்டிக் கொடுக்கும். அதனால் மண் பானை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தையம் சேர்த்து பொறிக்க விடவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்ததாக இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். தற்போது தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்துக் கிளறி புளிக் கரைசலை ஊற்றவும். அதோடு அரைத்து வைத்துள்ள தேங்காயை ஊற்றவும். தேவையான அளவு நீர் ஊற்றி கிளறி கொதிக்கவிடவும்.
தற்போது கறிவேப்பிலையைத் தூவவும். 8 நிமிடங்கள் சட்டியை மூடி கொதிக்கவிடவும்.

கொதித்ததும் அடுப்பை சிறு தீயில் வைத்து நெத்திலி மீன் துண்டுகளை குழம்பில் போடவும். சிறு தீயிலேயே ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்துவிடவும்.

இறுதியாக கொத்தமல்லி தழைத் தூவவும்.
கம கம நெத்திலி மீன் குழம்பு தயார்.

First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...