நாட்டுக்கோழி எலும்பு குழம்பு : செட்டிநாடு சுவையில் காரசாரமாக செய்ய ரெசிபி..!

நாட்டுக்கோழி எலும்பு குழம்பு

இந்த குழம்பை செய்து பாருங்கள் வீட்டில் அனைவரும் இந்த ருசிக்கு அடிமையாகிவிடுவார்கள்.

 • Share this:
  கோழிக்குழம்பு என்றாலே யாருக்குதான் பிடிக்காது. அதுவும் காரசாரமாக செட்டிநாடு சுவையில் சமைத்து சாப்பிட்டால் அதைவிட சிறந்த உணவு வேறென்ன இருக்க முடியும். அப்படியான சுவையை நீங்கள் சுவைக்க நினைத்தால் இந்த நாட்டுக்கோழி எலும்பு குழம்பு சமைத்துப் பாருங்கள்.

  தேவையான பொருட்கள் :

  அரைக்க :

  தேங்காய் - 1/4 கப்
  பச்சை மிளகாய் - 3
  சீரகம் - 1 tsp

  வேக வைக்க :

  சிக்கன் - 1/2 கிலோ
  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
  மஞ்சள் - 1/2 tsp
  தண்ணீர் - 1.5 கப்
  உப்பு - 1/2 tsp

  சமைக்க :

  தக்காளி - 1
  வெங்காயம் - 1
  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 tsp
  மிளகாய் தூள் - 1/2 tsp
  உப்பு - தே.அ
  கரம் மசாலா - 1/2 tsp
  மஞ்சள் பொடி - 1/4 tsp
  எண்ணெய் - 1 tsp

  தாளிக்க :

  எண்ணெய் - 1 tsp
  கடுகு - 1 tsp
  சீரகம் - 1 tsp
  காய்ந்த மிளகாய் - 2
  கருவேப்பிளை - சிறிதளவு  செய்முறை :

  முதலில் சமைக்க தேவையான பொருட்களை தயார் செய்துகொள்ளுங்கள். அடுத்ததாக அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

  இரண்டாவதாக சிக்கனை வேக வைத்துக்கொள்ளுங்கள். 6 விசில் விட்டு எடுங்கள்.

  அடுத்ததாக வேக வைத்த சிக்கன் தண்ணியை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின் கடாய் வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  பின் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் , கரம் மசாலா, மஞ்சள், சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

  தர்பூசணி..இளநீர்...மோர்...கோடைகால உணவுகளில் கிடைக்கும் அளவில்லா நன்மைகள்..!

  பின் சிக்கனை சேர்த்து கொதிக்கவிடுங்கள்.பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக்கொள்ளுங்கள். கலந்துவிட்டு தட்டுப்போட்டு மூடிவிடுங்கள்.

  நன்கு கொதித்த பிறகு தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து குழம்பில் ஊற்றுங்கள். கொத்தமல்லி இறுதியாக தூவுங்கள்.

  அவ்வளவுதான் நாட்டுக்கோழி எலும்பு குழம்பு தயார்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: