மட்டன் சூப் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் மாலையில் எத்தனை டென்ஷன் தலைவலி இருந்தாலும் ஒரு கப் மட்டன் சூப் குடித்தாலே எல்லாம் பறந்து போகும். நீங்களும் அந்த அனுபவத்தைப் பெற வீட்டிலேயே எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் பீஸ் - 50 கிராம்
மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் , சீரகத் தூள் , கரமசாலாப் பொடி - 1/4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 ஸ்பூன்
முட்டை - 1
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்
பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி ஆகியவை சேர்த்து அரைத்த விழுது - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பீன்ஸ் - 10
கேரட் - 1/2 துண்டு
காலிஃப்ளவர் - 1/4 துண்டு
வெஜிடபிள் ஸ்டாக் - 5 கப்
வெண்ணெய் - 1/2 ஸ்பூன்
மிளகுத் தூள், உப்பு - தேவைக்கு ஏற்ப
பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, ஸ்பிரிங் ஆனியன் - தேவையான அளவு
செய்முறை :
மட்டன் பீஸ் , மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் , சீரகத் தூள் , கரமசாலாப் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட்,
முட்டை,பொட்டுக்கடலை மாவு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி , உப்பு ஆகியவைச் சேர்த்து அரைத்த விழுது ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் வெண்ணெய் சேர்த்து வதக்கவும். அதோடு வெங்காயம், பூண்டு, வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து வதக்கவும். அதோடு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்.
மிளகுத் தூள் சேர்த்துகொள்ளவும். தற்போது உருண்டை பிடித்த மட்டனை சேர்த்து நன்கு வேகவிடவும்.
வெந்ததும் ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கிவிடவும்.
சுவையான மட்டன் சூப் தயார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.