மட்டன் குழம்பு என்றாலே அனைவருக்கும் வாய் ஊறும். அந்த வகையில் மட்டன் குழம்போடு உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்காய் சேர்த்தால் எப்படி இருக்கும் என சுவைத்துப்பார்க்க இதோ ரெசிபி...
தேவையான பொருட்கள் :
ஆட்டுக்கறி - 250 கிராம்
பெரிய உருளைக்கிழங்கு - 1
முருங்கைக்காய் - 1
எண்ணெய் - 2 tbsp
பட்டை - 1 துண்டு
ஏலக்காய், கிராம்பு, - 1
சோம்பு - 1 tsp
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tbsp
வெங்காயம் - 2
தக்காளி - 3
தண்ணீர் - தே.அ
உப்பு - தே.அ
குழம்பு மிளகாய் தூள் - 3 tbsp
செய்முறை :
முதலில் கறியை குக்கரில் போட்டு மஞ்சள் கொஞ்சம் உப்பு சேர்த்து 6 விசில் வர வேக வைத்துக்கொள்ளுங்கள்.
வெந்ததும் அதை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.
கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, சோம்பு, இலை போட்டு தாளியுங்கள். பின் வெங்காயம் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள்.
வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்குகள்.குழைய வதங்கியதும் உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் சேர்த்து வதக்குங்கள்.