சப்பாத்திக்கு பொருத்தமான மணக்கும் மஷ்ரூம் குருமா..எப்படி செய்வது?

பல வகைகளில் மருத்துவ குணம் நிறைந்த காளானை வாரம் ஒரு முறையேனும் உட்கொள்வது நல்லது.

சப்பாத்திக்கு பொருத்தமான மணக்கும் மஷ்ரூம் குருமா..எப்படி செய்வது?
மஷ்ரூம் குர்மா
  • News18
  • Last Updated: November 2, 2019, 3:23 PM IST
  • Share this:
காளான் மூளையின் சுருசுருப்பை அதிகரிக்கும். இதயத்தை பாதுகாக்கும். எலும்புகளுக்கு உறுதியளிக்கும், உடலுக்கு எப்போதும் குறையாத ஆற்றலை அளிக்கும். இப்படி பல வகைகளில் மருத்துவ குணம் நிறைந்த காளானை வாரம் ஒரு முறையேனும் உட்கொள்வது நல்லது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய வகையில் மஷ்ரூம் குருமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

காளான் - 200 கிராம்


எண்ணெய் - 3 ஸ்பூன்

கிராம்பு , பட்டை, இலை - 1

சோம்பு - 1 ஸ்பூன்கருவேப்பிலை - சிறிதளவு

வெங்காயம் - 2

பச்சை மிலகாய் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

தக்காளி - 2

மஞ்சள் - 1/4 ஸ்பூன்

மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்

தனியா தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - தே. அளவு

அரைக்க :

தேங்காய் - அரை கப்

முந்திரி - 10

கசகசா - இரண்டு ஸ்பூன்செய்முறை :

கடாயில் எண்ணெய் விட்டு பட்டை , கிராம்பு, இலை போட்டு வதக்கவும்.

அடுத்ததாக சோம்பு போட்டு பொறிந்ததும் வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கொள்ளவும். நன்கு வதங்கி தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும்போது மிளகாய் பொடி மற்றும் தனியா தூள் சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் காளானை நன்கு கழுவி அப்படியே கொட்டவும். நன்கு பிரட்டுங்கள்.

அடுத்ததாக மிக்ஸியில் தேங்காய் , முந்திரி , கசகச சேர்த்து மைய அரைக்கவும். ( கசகசாவை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும் )

அதை தற்போது காளானில் கொட்டி நன்குக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

நன்குக் கொதித்ததும் இறக்கி பறிமாறவும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: November 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்