அட்டகாச சுவையில் மொகலாய் மட்டன் கறி

news18
Updated: February 21, 2019, 4:32 PM IST
அட்டகாச சுவையில் மொகலாய் மட்டன் கறி
மாதிரிப் படம்
news18
Updated: February 21, 2019, 4:32 PM IST
உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக் கூடிய ஆட்டு இறைச்சி அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. கொழுப்பைக் கரைக்கக் கூடிய வைட்டமின் B சத்து நிறைந்திருக்கிறது. கொழுப்பு குறைவானது என்பதால் டயட் கண்ட்ரோலர்களும் தயக்கமின்றி உண்ணலாம்.

தேவையான பொருட்கள்

ஆட்டுக் கறி - 500 கிராம்


வெங்காயம் - 5
மஞ்சள் - 1/2
தயிர் - 1/2 கப்

Loading...

தண்ணீர் - 1/2 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
புதினா - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
நெய் - 3 tsp
மிளகு - 5
எண்ணெய் - 3 tsp
முந்திரி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 tsp
தனியா - 1 tsp
சீரகம் - 1/2 tsp
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
பட்டை - 1/2
சிவப்பு மிளகாய் - 2செய்முறை :

 • 3 வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, புதினா , கொத்தமல்லி , தனியா, சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, மிளகாய் தூள் போன்றவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.

 • மட்டனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

 • பின் கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய மட்டன் துண்டுகளை பொன்னிறம் வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

 • அடுத்ததாக முந்திரியையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய், நெய் ஊற்றி வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

 • பின் அரைத்து வைத்துள்ள மசாலாக் கலவையைக் கொட்டி 3 நிமிடங்கள் வதக்கவும்.

 • தற்போது வதக்கி வைத்துள்ள மட்டன் துண்டுகளை போட்டுப் பிரட்டிக் கொள்ளவும். மஞ்சள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கிளரவும்.
  அடுப்பை சிறு தீயில் வைத்து 7 முதல் 10 நிமிடங்களுக்கு கலவையை பிரட்டிக் கொண்டே இருங்கள். அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 • தற்போது வதக்கிய மட்டன் கலவையை அப்படியே குக்கரில் மாற்றி 4 முதல் 5 விசில் வரை வேக விடுங்கள்.

 • அடுப்பை அணைத்து குக்கரை உடனே திறக்காமல் முற்றிலுமாக விசில் குறைந்ததும் குக்கர் மூடியைத் திறங்கள். தற்போது அதில் நன்கு அடித்து வைத்துள்ள தயிரை ஊற்றி மீண்டும் 5 நிமிடங்கள் தீயில் கொதிக்க விடுங்கள்.

 • கலவை கொஞ்சம் கெட்டிப் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அனைத்து கொத்தமல்லி, புதினை இரண்டையும் பொடியாக நறுக்கி மேலே தூவி விடவும். அடுத்ததாக வறுத்து வைத்துள்ள முந்திரிகளைப் போடவும்.


சுவையான முகலாய் மட்டன் கறி தயார்.
First published: February 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...